அந்தக் காலத்தில் பெண்வீட்டார் தன் பெண்ணிற்கு மாப்பிள்ளையை தேர்ந்தெடுப்பதில் சில விதிமுறைகள் வைத்தீருந்தனர்.. அதன் படி வசதியுள்ள ஒரு பெண்ணிண் தகப்பன் பள்ளிவாசலில் காத்திருக்கிறார்.. பாங்கு சொன்னதும் யார் பள்ளிக்கு முதலில் தொழுக வருகிறார்கள் என கவனிக்கிறார்.. அப்போது ஒரு இளைஞன் தொழுக வருகிறான்.. அழகான தாடியோடு வந்தவன் ஒழுச் செய்து தொழுகையை நிறைவேற்றுகிறான்.. சுன்னத்தான தொழுகையையும் அவன் முடிக்கிறான்.. அவனின் ருக்கு, சஜ்தா மற்றும் சுன்னத்தான தொழுகைகள் எல்லாம் சரியாக இருந்ததால் இவருக்கு மிகவும் திருப்தி..
அந்த இளைஞனிடம் சென்று தம்பி என் பெண்ணிற்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறேன்.. நீங்கள் தான் சரியான மாப்பிள்ளை.. என் பெண்ணை மணந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.. அதற்கு அந்த இளைஞன் ஐய்யா நான் மிகவும் ஏழை.. சோத்துக்கே வழியில்லாதவன்.. நீங்களோ பெரிய பணக்காரர் அதனால் ஒத்து வராது என்று கூற அதற்கு அவர் இறையச்சம் உள்ள மாப்பிள்ளை தான் எனக்கு தேவை பணக்கார மாப்பிள்ளை அல்ல என கூறி அன்று மாலையே தன் பெண்ணிற்கு நிக்காஹ் செய்து வைத்துவிடுகிறார்..
அன்று முதல் இரவு கணவன் அமர்ந்திருக்க மனைவி உள்ளே வருகிறாள்.. ஒரு கோப்பையில் ஏதோ ஊறிக் கொண்டிருக்க பக்கத்தில் ஒரு பொட்டளம் மடித்து வைக்கப்பட்டிருந்தது.. உள்ளே வந்தவள் கணவணிடம் இது என்ன என்று கேட்க அவன் மதியம் உன் அத்தா என்னை உனக்கு திருமணம் செய்து தருகிறேன் என்று சொன்ன போதே உனக்கு உணவளிப்பது என் கடமையாகிவிட்டது ..எனக்கு மதியம் இரண்டு ரொட்டி துண்டுகள் கிடைத்தன.. ஒன்றை இந்த கோப்பை நீரில் ஊறப்போட்டுள்ளேன்.. இரவு நேரம் சாப்பிடும்போது சத்தம் கேட்கும் என்பதால்.. இன்னொன்றுதான் இந்த பொட்டளத்தில் மடித்துள்ளேன்.. நாளை உணவுக்காக என்று கூறினான் ..
இதைக் கேட்டதும் மனைவி உங்களை நிக்காஹ் செய்தது தப்பா போச்சு என சொல்ல கணவண் அதிர்ச்சி அடைந்தான்.. கணவன் உடனே மனைவியிடம் இதைத்தான் உங்க அத்தா கிட்ட சொன்னேன் உங்கள் வதிக்கெல்லாம் நான் ஈடாக வரமுடியாது என்று கூறினான்.. அதைக்கேட்ட மனைவி நான் அதை சொல்வில்லை ஒரு ரொட்டி நமக்கு போதுமென்றால் இன்னொரு ரொட்டியை நீங்கள் தர்மம் செய்திருக்க வேண்டும்.. இன்னைக்கு கொடுத்த அல்லாஹ் நாளைக்கு கொடுக்கமாட்டான் என்ற நம்பிக்கை இல்லையா?? நம்பிக்கை இல்லையேனில் ஈமானும் இல்லை என கூற தன் தவறை உணர்ந்த அவன் தன் மனைவியை கட்டித் தழுவினான்.. ஒரு ரொட்டியை சேர்ந்து சாப்பிட்ட அவர்கள் இன்னொரு ரொட்டியை தானம் செய்தனர்!