குடும்ப அரசியல்.

310 19 4
                                    

திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்:

"இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா.
இது  ஒரு அமைச்சரவை மாதிரி.

இந்த வீட்டுக்கு முதல் மந்திரி உங்க மாமனார்தான். அவர்தான் பாதுகாப்புத் துறை, வெளியுறவுத்துறை எல்லாம் கவனிச்சுக்குவார்.

"இங்க நான்தான் துணை முதல்வர். உள்துறை,  நிதித்துறை, ஜவுளித்துறை எல்லாம் என் கட்டுப்பாட்டுல வரும்.

"என் மகன் அதாவது உன் வீட்டுக்காரன்தான் தொழில் துறை, போக்குவரத்துத் துறை, வீட்டு வசதித்துறை எல்லாம் பாத்துக்குவான்.

"என் மக, அதாவது உன்னோட நாத்தனார் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறையையும்,  விளையாட்டுத் துறையையும் பாத்துக்குவா.

"நீ எதைப் பாத்துக்கறே சொல்லு? உனக்கு உணவுத்துறை, சுகாதாரத்துறை, குடும்ப நலத்துறை எல்லாம் ஒதுக்கலாமுன்னு இருக்கேன்; சரிதானா?"

சிரித்துக்கொண்டே மருமகள் சொன்னாள்:

"ஐயோ அத்தை; 
பெரிய பொறுப்பெல்லாம் எனக்கு எதுக்கு?  நீங்களே எல்லா நிர்வாகமும் பண்ணுங்க.  நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்."

-----------------------------------------------------------

மனைவிக்கு கணவன் ஒரு  SMS  அனுப்புகிறான் ....
" இரவு நான் வர கொஞ்சம் நேரம் ஆகும் . அதிக  வேலை ... எனக்கு சூடாக  பிரியாணி செய்து வைக்கவும் "
சுமார் 20 நிமிடங்கள் ஆகியும் பதில் இல்லை . அடுத்த SMS  அனுப்புகிறான் ....
" எங்கள் அலுவலகத்தில் எனக்கு சம்பள உயர்வு கொடுத்திருக்கிறார்கள் . அடுத்த மாதம் நீ கேட்ட காரை  வாங்கித் தரலாம் என்று முடிவு பண்ணிட்டேன் ."

உடனே பதில் :
" ஆல்டோ K 10 வாங்கி குடுங்க .... ஆரஞ்சு கலர் "

கணவன் : " முதல் SMS  கெடைச்சுதான்னு செக் பண்ண தான் ரெண்டாவது மெசேஜ்..... எல்லாம் அதே சம்பளம் தான்  ....பிரியாணிய மறந்துடாதே "

நாங்க ஆம்பள... கேனயன்னா நெனச்சீங்க....

மனைவியின் பதில் SMS

கேஸ் தீர்ந்து போச்சு.  வழியில் நீங்களும் சாப்பிட்டு எனக்கும் பார்சல் உடன் வரவும்.

மனைவின்னா என்ன நெனச்சீங்க... ஆம்பளைகளப் பெத்ததே பொம்பள தான்யா....

-------------------------------------------------------------

வாசித்ததில் நேசித்தவை..Where stories live. Discover now