Internet உலகம் ...!!!

517 25 8
                                    

படித்ததில் சிந்திக்க வைத்தது.

********************
அருகில் இருப்பவருடன் பேச நேரமிருக்காது
ஆனால் ....
Phone ல் பேச நேரமிருக்கும்
உலகம் இது ...!!

வாழ்த்தையும், பரிதாபத்தையும்
Facebook யில் போட்டு Like யின் மூலம்
வாங்கிக்கொள்ளும்
உலகம் இது ..!!

ஒரே வீட்டில் இருந்து கொண்டு
அவர்களது மன நிலையை
Whatsapp Status யில் படிக்கும்
உலகம் இது ....!!

தங்கையின் திருமண நாளிதழைக்
கூட வேகமாக Download செய்து
மெதுவாகப் படிக்கும்
உலகம் இது ..!!

உதித்த எண்ணத்தைக் கூட
உறவினரிடம் பகிராமல்
ஊராரிடம் Twitter யில் பகிரும்
உலகம் இது ..!!

பெற்ற குழந்தைக்கு
அப்பாவின் முகம் மறந்துவிடக் கூடாது
என்று Skype யில் முகம் காட்டும்
உலகம் இது ..!!

E - mail லில் காதலைச் சொல்லி
பல மைல்களுக்கு
அப்பால் காத்திருக்கும்
உலகம் இது ..!!

சொல்லிக் கொடுக்க குரு இருந்தும்
அது சரியான விடையா ? என்று
Google லில் தேடும்
உலகம் இது ..!!

செத்தவனுடன் Selfie எடுத்து
அதை Profile Picture ராய் வைக்கும் உலகம் இது ..!!

வீட்டுக்கு வா என்று சொல்லாமல்
Onlineக்கு வா என்று சொல்லும்
உலகம் இது ..!!

பெற்றவர்களை Orphanage யில்
விற்று விட்டு
பென்ஸ் காரை Online யில் வாங்கும்
உலகம் இது ..!!

நல்லா இருக்கிறீயா ? என்பதைக் கூட மாற்றி
Android Mobile வைத்திருக்கிறீயா ? என்று கேட்கும்
உலகம் இது ..!!

மொத்தத்தில் ..........
முகத்தைப் பார்த்து சிரிக்கும் காலம் போய்
Moblie ஐ பார்த்து சிரிக்கும் காலம் வந்துவிட்டது ..!!

App க்கள் மட்டும் வாழ்க்கைக்குத் தேவையில்லை,
அப்பா அம்மாவும் தேவை தான் என்று
எப்பொழுது புரிகிறதோ ??
அப்பொழு தான்
மனிதனும் உருப்படுவான்
நாடும் உருப்படும் ...!!!

வாசித்ததில் நேசித்தவை..Where stories live. Discover now