நிலா...4-விடுமுறை நாட்களில்

183 5 5
                                    

என்னவனே ....

உன் விடுமுறை நாட்களில் ...

நான் கண்முழிக்கும் முன்னே
நீ விழிக்க வேண்டும் ....

உன் விழியோடு
என் கண்கள் காதலோடு
உறவாடி உன்மடியில்
துயில் கொள்ள வேண்டும் ...

துயிலுக்கு பின்
உன் கையால் தேநீர் வேண்டும்...

அத்தேனீரில் தித்திப்பு நீ
குறைத்திருக்க வேண்டும் ....

தித்திப்பு குறைந்திற்க்க
நான் வெட்கத்தில் என் பூவிதழ்
சுழிக்க வேண்டும் ..

என் இதழ் சுழிப்பிற்கு
தண்டனையாக நீ என்னிதழ்
சுவைக்க வேண்டும் ....

நான் தலைகுளித்து வந்தால்
ஒரு தாய்போல் என் தலை
துவட்டவேண்டும் ....

காலை உணவை
நீ சமைக்க வேண்டும் ...

அவ்வுணவை
உன் கையால் எனக்கு
உணவூட்ட வேண்டும் ...

என்னிதழில்
நீ ஊட்டிய சோற்று பருக்கை
நீ அறிந்து நான் அறியாமல்
இதழ்மேல் ஒட்டி இருக்க வேண்டும் ...

அதை உணர்ந்து
என் உதட்டை தட்டிவிடும்
முன்னே நீ உன்னிதழ் கொண்டு
அப்பருக்கையை தட்டி
பறிக்க வேண்டும் ...

மாலை வரை உன்னுடன்
காதல் கதை பேசவேண்டும் ...

அக்காதல் கதையில் உன்னோடு
உன்னுயிராய் உன் மனத்தோடு
நான் கலந்திட வேண்டும் ...

மாலை பொழுது மங்கிட வேண்டும்...

என் தளிர் கூந்தலில்
என்னவன் கையால் வாங்கி வந்த
மல்லிகையாய் அவன் கையால் மலர்சூடி இருக்கவேண்டும் ...

நிலவின் வருகைக்காக
நாங்கள் காத்திருக்க வேண்டும் ...

எங்கள் காதலை கண்ட
அந்நிலவும் செம்மை கொண்டு
மேகக்கூட்டத்தோடு ஒளிந்துதிருந்து
மேகக்கூட்டத்தோடு ஊடல் கொள்ளவேண்டும் ....

அந்த ஊடலில் விளைவாக
காற்றோடு கலந்த அக்காதல்
மழை எங்கள் பட்டுமேனியில் பட்டுப்படாமலும் செல்லவேண்டும் ...

அப்படி சென்ற சில மழை
துளிகள் அவனுக்காவே என்னிதழ்
மீது சில நொடி இளைப்பாற வேண்டும் ..

அதை கண்ட என் கண்ணாளனின்
கண்களின் மீண்டும் மீண்டும்
என் மீதான காதல் உயிர்ப்பெழ வேண்டும் ...

அந்த உயிர்ப்பில் அவனோடு
சிலர் நேர ஊடலும் பல நேரம்
காதலும் க(கொ)ண்டு நான்
அவனொடு நொடி நொடி காதலோடு
வாழவேண்டும் ....

நிலாவின் கவிதைகள்Where stories live. Discover now