நிலா...39

271 1 1
                                    

கடிகாரம் :

காலங்கள் மாறிவிட்டது
நாட்களும் உருண்டோடிவிட்டது
என்னுள்ளும் சில மாற்றங்கள்
வந்துவிட்டதடி ...

ஆனாலும்
உன் நித்திரை முகத்தில்
அத்தனை வாட்டங்கள் ...

டிக் டிக் டிக் என்று
நான் ஒலியெழுப்ப நீ ....

நடுஜாமத்தில் விழிப்புத்தட்டி
கண்சிமிட்டி மங்கிய
ஒளிவிளக்கை பார்க்கிறாய் ...

ஆள் அளவரமற்ற
நிசப்தநிலை உன்னுள் ...

இதோ நான் இருக்கிறேன்
என்று உனக்கு உணர்த்த
நொடிக்கு ஒருமுறை
கூக்குரல் விடுத்து
அழைக்கிறேன் உன்னை ....

தூக்கமும் கலையாமல்
உன் மனதின் துக்கமும்
உன்னை விட்டு துளையாமல்
சில நொடி கண்சிமிட்டல்களை
கூட மறந்த நிலையில் இருக்கிறாய் ...

சுவர் மணிக்கூட்டில் அனுதினமும்
நாள் தவறாமல் நான் சுழலுவது போல் ...

நீ கடந்து வந்த பாதையின்
நினைவுகளை ஒருமுறை
சுழற்றிப்பார்க்கிறாய் ...

இத்தனை ஆண்டுகளில்
உன்னுள் எத்தனை எத்தனை
மாற்றங்கள் என்று ...

சிரிக்கமட்டுமே தெரிந்த எனக்கு
இன்று அழவும் தெரியுமென்று
விரக்தியில் இந்த நொடிகூட
உன்னை அறியாமல் அழுகிறாய்
தலையணையை நனைத்துக்கொண்டு ...

யாரும் உன் அழுகையை
பார்க்கவில்லை என்ற
நிம்மதியில் நீயிருந்தாய் ...

இதோ நான் பார்த்துவிட்டேன்
எங்கே நீ பார்க்கப்போகிறாயோ என்ற
சிறு அச்சத்தில் என்னை அறியாமலே
மீண்டும் கூக்குரலோடு ...

துயிலின் மயக்கத்தில்
சில நினைவுகளின் தடுமாற்றத்தில்
என் டிக் டிக் கூக்குரல் கூட
உன் இதய துடிப்போ என்று
அஞ்சும் நிலைக்கு மனதால்
பித்தாகிவிட்டாய் ...

மீண்டும் மீண்டும்
என்னை ஆசையாய் பார்க்கிறாய்
தூக்கத்தை துளைத்த சில
இரவுகளின் ஏக்கத்தோடு ...

உன் இன்றைய நாளின்
விடியலையும் நீ எதிர்பார்க்கும்
உன் வாழ்வின் விடியலையும் என்று
விடியுமோ என்னும் அச்சத்தில்
உன் விழிநீர் ததும்பும்
பார்வையோடு என்னையே பார்க்கிறாய் ...

உன் ஏக்கங்கள் நிறைந்த கவலைகளை
புரிந்து கொண்டு உனக்காக
உன் துயில் வேண்டி இறைவனிடம்
பிராத்திக்கிறேன் ...

என் பிராத்தினையை செவிசாய்த்து
சொற்ப நிமிடத்தில் என்னை
பார்த்துக்கொண்டே
உன் விழிமூடிவிட்டாய் இன்றைய
மீதி நித்திரைக்கு ....

உன் கவலைகளை மறந்து
முழுநிலாவை நீ துயில்
கொள்ளுகையில் ...

உன்னை பார்த்து எதோ
இனம் புரியா நிம்மதியும்
பேராசையும் என்னுள் ..

நானும் என் நினைவுகளை
ஒருமுறையென்னும் சுழற்றி
பார்க்கடுமா என்று சுழன்றுகொண்டே

டிக் டிக் டிக் ...............

நிலாவின் கவிதைகள்Where stories live. Discover now