உலகில் கிடைத்தற்கரிய
பொக்கிஷம் எல்லோருக்கும் எளிமையாக கிட்டிடாது ஆனால்
கிட்டியது எனக்குதோழனும் தோழியும் சரிவிகிதம் தானே நட்பில் கூட ஆண்
பெண் பேதம் வேண்டுமா என்னதோழி தாயாய் சகோதரியாய்
தோழன் தந்தையாய்
சகோதரனாய்
இவர்களில் எதற்கு பாகுபாடுபேருந்துகளிலும் பொது இடங்களிலும் கண்ணியமாய் தந்தையாய் உருமாறி காவலிருக்கும் தோழன்
உடல் நிலை சரியில்லா நேரத்தில் தாயாய் கண்ணுக்குள் பாதுகாப்பாள் தோழிஇவர்களிடமிருந்து மட்டுமே கேட்க விரும்பும் திரும்ப பிரயோகிக்க கூடிய அகராதியிலில்லா அற்புதமான வார்த்தைகள்
சொந்தங்கள் தரும் புத்திமதிகள் கசந்தாலும் நம் நட்புகள் தரும் நிறைய திட்டுகளுடன் அதிகாரத் தோரணையில் இது இப்படித்தான் எனும் ஆரவாரம் ரசிக்கும் என்றும்
பெண் நட்பின் ஆயுட்காலம் குறைவாகினும் நினைவுகள் அளப்பறியது நீண்ட பிரிவின்
பின் சந்தித்து கொள்கையில்
தொலைபேசி உரையாடல்களின்
போது பேசுப்படும் மாமியார் நாத்தனார் ஓரகத்தி புரணிகளுக்கு
ஈடு இணையில்லைகல்யாணமாகி என் இணை வந்தாலும் நீண்ட இடைவெளிக்குப் பின் பேசும் போது அன்றும் இன்றும் அவனிடமிருந்து கேட்கும் முதல் வார்த்தை இன்னும் உயிரோடுதான் இருக்கிறாயா
இதற்கு இணை வார்த்தை என் அகராதியில் இல்லைகணவன் அருகிலிருந்தால் பன்மை சிறு தொலைவு நகர்ந்தால் ஒருமை
என்னில் உன் அக்கறையை இதைவிட எப்படிச் சொல்லகாலங்கள் கூட பொறாமை கொள்ளும் நம் நட்பின் சுகமான நினைவுகளைக் கண்டு அதனிடம் கூற வேண்டும் கண் வைக்காதே என் நட்புகளும் என்னைப் போல சோம்பேறிகள் தான்
திருஷ்டி களிக்க அவர்கள் தூக்கம் இடமளிக்காது என்று
![](https://img.wattpad.com/cover/138896410-288-k600312.jpg)
BINABASA MO ANG
Niru's
Poetryபெண்ணின் இதயம் ஒரு கல். அதற்கான சிற்பிக்காகவே காத்திருக்கும் செதுக்கப்பட..