என் சகோ

62 20 32
                                    

திட்டுகளும் போடி எனும்
அந்த ஒற்றை வார்த்தையும் உணர்த்தும் நம் உறவை

இவனையன்றி யாருக்கும் அனுமதியில்லை அவ்வார்த்தை என்னிடம் பிரயோகிக்க

சிறு சண்டைகளும் பெரிதாய் உருவகம் கொண்டு என்னை மன்னிப்பு கேட்க வைக்கும் அவன் குழந்தை தனம்

என் திறமையில் எனக்கில்லா நம்பிக்கை அவனுக்கு நானே அதிசயிக்கும் வகையில்

எங்கிருந்து வந்தான் என்று
தெரியாது ஆனால் என்றும்
என்னை நீங்க அனுமதியேன்

உடன்பிறப்பாய்  ஆண் இல்லை
எனும் ஏக்கம் போக்கிட வந்தான்
அவன் "என் சகோ"

Niru's Donde viven las historias. Descúbrelo ahora