ஏன்?

23 3 0
                                    

உடையில் கட்டுப்பாடு உணவில் கட்டுப்பாடு
உடலால் மட்டுமே நமக்கு வேறுபாடு
பின் ஏன் இந்த கட்டுப்பாடு?

காவியம் பெண் கவிதை பெண்
நீர் பெண் நெருப்பு பெண் என்று கூறி
பின் ஏன் விட்டில் அடைக்கிறாய்?

காதலை மறுப்பதும் தவறு
காதலை ஏற்பதும் தவறு
பின் என்ன தான் செய்வாள்?

ஆவதும் பெண்ணாலே
அழிவதும் பெண்ணாலே என்றிர்
5 நாள் முதல் 60 வயது வரை பெண்களை
அழிப்பது யார்?



(கணவனை இழந்த பொழுதும் தன் தலை மகனை போருக்கு அனுப்பிய வீர பெண்கள் வாழ்ந்த மண்  அன்றோ இது?

தன் பெரும் செல்வங்களை தன் வாழ்க்கைகாக கொலை செய்யும்
அவலம் ஏன் வந்தது?

பெண் சுதந்திரம் தவறான பாதையில் செல்வதால் .....
என் கருத்து )

பொக்கிஷம்Where stories live. Discover now