கலகல எனப் பேசி
சிரிக்க வைத்தாய் என்னை...டமடம என கெட்டி மேளம் கொட்ட
திருமணம் செய்தாய் என்னை..சின்ன சின்ன பார்வைகளால்
சீண்டி பார்ததாய் என்னை..தக தக என மின்னும் தங்கத்தால்
அலங்கரித்தாய் என்னை..சில நாள் கழிந்தது
கொழுகொழு எனப் பெண்ணை
பெற்றேன் நான்பட பட எனக் குறை கூறி
திட்டி தவிர்த்தாய் என்னைசிடு சிடு எனக் கோபத்தால்
கலங்க வைத்தாய் என்னைபக் பக் என எனது
இதயம் துடித்ததுதர தர என இழந்து
சென்றாய் என்னைகடகடவென நம் மகள் சிரிப்பதை
பார்க்க செய்தாய் என்னைபொலபொல என
உன் கண்ணிர் சீந்தியதுசொரசொரப்பான உன் கைகளால்
என் முகத்தை ஏந்தினாய்என்னை மன்னிப்பாயா
என் அருமை மனைவியே
என் தாயை எனக்காக பெற்று தந்த
முழுமதியே என்றாய்
என் ஏக்கம் தீர்ந்தது.(பெண் பிள்ளை பெற்றது என் குற்றம் இல்லை....)
(கடவுள் நமக்கு அளிக்கும் வரமே நம் குழந்தைகள்..
அதில் ஆண் பெண் பேதம் ஏனோ?
பாலில் வேறுபாடுகள் உண்டு
பாசத்தில் உண்டோ?
சிந்திப்போம்)
ESTÁS LEYENDO
பொக்கிஷம்
Poesíaஇக்காலத்திலும் மாற்றமில்லையே? என் பல கேள்விகள்.. மற்றும் என் கிறுக்கல்களின் தொகுப்பு