வீட்டுப்பெண் அழுதால் ஆகாது என்றாய்
எப்போது உணர்வாய் உன்
வீட்டில் பிறந்தவள் மட்டும் வீட்டுப்பெண் அல்லவாழ வந்த பெண்ணும் உன் வீட்டுப்பெண்
என்றுஉணர்த்தும் காலம் வருமா? இல்லை
உணர்ந்தும் துன்புறுத்தும் அறிவிலியா நீ?உன் வம்சம் அவள் கையில் இருந்தும்
உன் அடிமையாக வாழ்கிறாள்?நீயும் பெண் என்பதால் பெண்னின்
பொறுமையை சோதிக்கின்றாயா?இல்லை உன் மகனின் நேசம் பெற்ற
பொறாமையால் சோதிக்கின்றாயா?உன்னை மறு தாயாய் பார்க்கும் அப்பேதையை
நீ மறு மகளாய் பார்க்க வேண்டாம்
மனிதா உயிராய் பார்க்க என்ன தடை?உன் குடும்ப நலன் பேணும் பொருட்டு
தன் குடும்பம் மறந்த மங்கை அவள்அவளை பேணிக் காப்பது
உன் பொறுப்பன்றோ?விசேடத்திற்கு என் மகளுக்கு ஆடை எடு என்றாயே
நீயும் ஒன்று எடுத்துக்கொள் என்றாயா?பிள்ளை பெறவில்லை என்றாய்?
ஏன் உனக்கு இவ்வளவு அவசரம்
இன்னும் வாழ்வில் உயரவில்லை அதற்குள்
பிள்ளையா என்றாய்?
பாவம் அம்மா அப்பேதை பெண்.சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்றாய்
ஆண் வாரிசு மட்டும் வேண்டும் என்றாய்
கடவுளின் கையில் அன்றோ உள்ளது?
பெண்ணை பெற்றால் அப்பெதும்பை.அப்பெண் சிசுவும் உன் வாரிசு அன்றோ?
தொட மருத்தாய்? தூக்க மறுத்தாய்?
ஒன்றை மறந்தாய் நீயும் ஓர் பெண்.
ESTÁS LEYENDO
பொக்கிஷம்
Poesíaஇக்காலத்திலும் மாற்றமில்லையே? என் பல கேள்விகள்.. மற்றும் என் கிறுக்கல்களின் தொகுப்பு