வள்ளுவன் வாசுகி என அழைக்க
வாளி அந்தரத்தில் தொங்க
வாசுகி ஓடி வந்தாள் அன்றோ ?வாசுகி வள்ளுவன் என அழைத்திருப்பின்
வாளியே வள்ளுவனுக்கு பதில் வந்திருக்குமோ?ஆண் பெயரிட்டு அழைக்க மறுநோடி
அப்பெண் வந்தாள் அவள் கற்ப்புக்கரசி
அப்பெண்ணே ஆணை பெயரிட்டு
அழைப்பின் அவள் ஆணவமிக்கவளோ?ஏன்னடா இந்த பாகுபாடு?
ஆனால் இன்னும் பல வாசுகிகள்
வாழத்தான் செய்கின்றனர்
வள்ளுவரை போன்ற நல்ல கணவனுடன் அல்ல....
மனித உருவில் வாழும் மிருகங்களுடன்..(நான் பெண்ணியவாதி அல்ல
நானும் ஒர் பெண்.... பலரின் மனக்குமுறல்களால் சிறு முயற்சி)
ESTÁS LEYENDO
பொக்கிஷம்
Poesíaஇக்காலத்திலும் மாற்றமில்லையே? என் பல கேள்விகள்.. மற்றும் என் கிறுக்கல்களின் தொகுப்பு