பெண் சுதத்திரம்

30 7 2
                                    

எங்கே பெண் சுதத்திரம்?

தான் விரும்பிய கல்வியை மனதில் புதைத்து தந்தை சொல்லுவதை
அரை மனதாய் படிக்கும்
பெண்கள் இன்னும் வாழ்ந்து
கொண்டு தான் இருக்கிறார்கள்.

தான் விரும்பிய மணாளனை மறந்து
தந்தை காட்டும் மணாளனை
சிரம் தாழ்த்தி ஏற்கும்
பெண்கள் இன்னும் வாழ்ந்து
கொண்டு தான் இருக்கிறார்கள்.

தான் விரும்பிய பணியை உதறி
தன் கணவனின் ஆணை ஏற்று
நான்கு சுவற்றில் அடைந்த் கிடக்கும்
பெண்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்

ஆம் பெண்ணை போக பொருளாய்
அடிமையாய் பார்க்கும் சில ஆண்கள் வாழும் வரை இத்தகய பெண்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்கள்
ஜடமாக???????

பொக்கிஷம்Donde viven las historias. Descúbrelo ahora