கடற்கரை ஓரம் நடந்து வந்து கொண்டிருந்தேன் ...அவரின் நினைவுகள் எட்டி பார்த்தன. இங்க தான் நானும் அவரும் கை கோர்த்து கல்யாணம் ஆன முதல் நாள் நடந்து வந்தோம். கணவன் மனைவியா இல்லை காதல் ஜோடியானு பாக்குற அத்தனை பேரு ஆச்சரியமா பார்த்தாங்க 😀
என்னவனின் பெயர் "விஷால்" சும்மா பார்க்க அப்படி இருப்பாரு ...நல்ல அழகும் நல்ல திறமையும் கொண்ட மனிதர். தன் குடும்பத்தை விட நாட்டை நேசிக்கும் மனிதநேயம் கொண்டவர்.
விஷால் ...னு அவங்க அம்மா கூப்பிட்டா உடனே வந்து நிப்பாரா னு தெரியாது ஆனால் எதாவது பிரச்சினை னு மக்கள் கூப்பிட்டா...உடனே போய் நிப்பாரு 😀உண்மையை சொல்லனும் னா ....அவரு நல்லது செய்றதுக்குனே பிறந்தவர்.
அவர் இப்ப எங்கனு கேக்குறீங்க அப்படிதானே "காஷ்மீர்" ல ...இராணுவ வீரனாக ,,பணிபுரிந்து கொண்டு இருக்கிறார்....கல்யாணம் ஆகி 1 வருஷம் ஆச்சு ...இன்னைக்கு வெட்டிங் ஆனிவர்ஸரி. அவரு என் பக்கத்தில் இல்லை ...ஆனால் அவரு தான் என் மனசுக்குள் இருக்காரே.... முதல் வருஷம் கல்யாண நாள் கோவில் கூடவா போல ????னு நீங்க கேக்கலாம் ஆனால்.... எனக்கு கோவில் இந்த கடற்கரை தான். அலைகள் ஆசிர்வாதம் செய்வது போல்...என் கால்களை நினைத்தது....
நான்... தனியா தான் இருக்கிறேன் ..என்னோட அம்மா அப்பா எல்லாம் அமெரிக்க ல என் தம்பி கூட இருக்காங்க.... அங்க அவங்களுக்கு குடியுரிமை இருக்கு.
நான் சுத்த தமிழச்சி..... எங்க அப்பா அம்மா மாதிரி தம்பி மாதிரி வெளிநாட்டு மோகம் இல்லை...."இந்தியா "தான்.... எல்லாம் ...😀இந்த பற்று தான் அவரை கல்யாணம் பன்னிக்க காரணம்.அவரோட அம்மா அப்பா எல்லாம் திருச்சி பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் இருக்காங்க. நான் இங்க எப்படி தனியா இருக்கேன்?????? ஹாஹா நான் வீட்டிலேயே டெய்லரிங் க்ளாஸ் எடுக்கிறேன் ....எனக்கு 12 ஸ்டுடன் இருக்காங்க.... கல கலனு பேசிட்டே இருப்பாங்க.... டைம் போக்குறது அவ்வளவு கடினம் இல்லை... எனக்கு இயற்கை ரசிக்க நேரம் போதாது... பறவை ,கடல் , சூரியன் னு எல்லாம் என்னோட ப்ரண்ட்ஸ் தான். 😀
சரி சரி நான் வீட்டுக்கு போகிறேன் ....வீட்டுக்கு போன உடனே சற்று அசதியில் அமர்ந்தேன்...டிவி ஆன் செய்தவாறு சாப்பிட்டு கொண்டிருந்தேன் அப்போது தான் அந்த செய்தி பார்த்தேன். நமக்கும் வேறுநாட்டுக்கும் போர் என்று. கண்களில் ஓரம் நீர் வழிந்தது ...என்னவன் எந்த பிரச்சினை இல்லாமல் இந்த வருடம் என்னை பார்க்க வருவானோ ???வருவான் ...ஆம் அவன் என் கழுத்தில் கட்டிய தாலி என்னும் தெய்வம் அவனுக்கு காவலாக இருக்கும்.
இருக்கட்டும் 😀
YOU ARE READING
கடற்கரை (முடிவுற்றது)
Romanceஇது ஒரு இராணுவ வீரனின் மனைவியின் தவிப்பு பற்றின காதல் கதை. அவனுக்காக அவள் காத்துக்கொண்டு இருக்கிறாள் .