12

372 21 37
                                    

கரண் அவளை அழைச்சிட்டு வீட்டுக்கு போனான்...தன் மகளை கண்ட.தாய் ஓடி வந்து அணைத்து "எங்கம்மா போன...லெட்டர் எழுதிட்டு..

ஹாய் ஆண்டி என் பேரு கரண் என்று முந்தி கொண்டு கவனத்தை திசை திருப்பினான்.....

வாங்க தம்பி...நீங்க யாரு...

நான் ....அன்பரசி ப்ரண்டு ஆண்டி...என்னை ரிஸிவ் பன்ன தான் வந்தா....சும்மா உங்க எல்லாரையும் விளையாட்டு காட்ட அப்படி லெட்டர் எல்லாம்....

அப்படியா?????ஓ........சரி சரி உள்ள வாங்க தம்பி..... அன்பரசி யிடம் கண் ஜாடை யால் எதையும் சொல்லாதே நான் பார்த்து கொள்கிறேன் என்று அவன் கூற....உள்ளே நுழைந்து அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க...

"ஆண்டி நான் அன்பரசி யை அழச்சிட்டு டெல்லி போலானு இருக்கேன்....அங்க எங்க பழைய ப்ரட்டுஸ் எல்லாம் சேர்ந்து ரீ யூனியன் பன்ன போறோம் அதான்....

சரிப்பா அங்கிள் கிட்ட கேக்குற....

மறுநாள் ...அவர்கள் நினைத்தபடி டெல்லி புரப்பட்டனர் ப்ளைட்டில்....😀😀😀

ஏய் அன்பரசி பெல்ட் மாட்டு .....

ம்ம்ம் எனக்கு இது எப்படி போடுறது தெரியல கரண்...

இரு போட்டு விடுறன் 😀😀

ஆமா...அன்பு நீ ப்ளைட் ல வந்ததே இல்லை யா..

இல்லை....

ம்ம்ம் .....சரி சரி.....பாவம் முதல் வாட்டி வர ஆனால் மனசுல கவலையோட வர....என்ன செய்ய....

ம்ம்ம்..... என்ன பன்றது எல்லாம் என் தலை எழுத்து....

இந்த கஷ்டம் எல்லாம் கண்டிப்பாக மாறும் அன்பரசி

உங்க வார்த்தை நம்பிக்கை தருது மிஸ்டர் கரண் ரொம்ப தாங்க்ஸ் ....அப்புறம் அவரு ஆஸ்பத்திரியில் இருக்காரு னு சொன்னிங்க கூட யார் இருக்கா ???

இராணுவ பணிப்பெண் ஒருத்தி இருக்கா அவ பொறுப்பு ல விட்டு வந்துருக்கேன்.....

ஓ......என்னை பார்த்த அவருக்கு ஞாபகம் திரும்ப வாய்ப்பு இருக்கு ல??

அன்பு நீ ஏன் உன் மனசு போட்டு குழப்புற ....சும்மா கம்முனு வா மா..

சரி.....😊

...கரணும் அன்பும் டெல்லி வந்து இறங்கினர் ...வந்து ஒரு ஓட்டலில் ப்ரஷ் அப் ஆகிட்டு சாப்பிட்டு விட்டு மருத்துவ மனை செல்ல .....

அங்கு கோமாவில் படுத்திருந்த கணவனை கண்டு அருகில் இருந்த பணிப்பெண்ணை வெளியே போகும் படி கூறி ...பின் விஷால் அருகில் சேர் போட்டு அமர்ந்து "விஷால் ....விஷால் என்று அவன் காதில் விழும்படி கூப்பிட்டு கொண்டு தலையை கோதினால் ...அவளின் கை தீண்டல் அவனரிவானோ என்னமோ.....கண்களில் ஓரம் நீர் ஓடியது......

"ஏய் மாமா அழாத டா....நான் இருக்கேன்...நான் தான் வந்துட்டேன் ல...நீ சரி ஆகிடுவ மாமா....

அவனால் எதுவும் கூறவும் முடியாது கண்கள் மட்டுமே வெறித்து நோக்கியபடி இருந்தான்........

கதவை திறந்தார் டாக்டர்....Excuse me ..

வாங்க டாக்டர்....

ஜெனரல் டெய்லி செக்கப் தான்..... ம்ம்ம்.... ஓகே ....இப்ப கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் வருது ...பாக்கலாம் ....செரியாகிடும் ....

டாக்டர்..... அ....அது வந்து.....என்று அவன் காலில் விழுந்தாள் ...."சார் என் புருஷன எப்படியாச்சு காப்பாத்துங்க என் உசுரே அவரு தான்...."

மா.....எழந்திடு மா.....எல்லாம் மேல கடவுள் னு ஒருத்தர் இருக்கார் மா...

டாக்டர் ....எனக்கு இப்ப நீங்க தான் கடவுள் மாதிரி.... வேற எந்த கடவுளும் என் கண்ணுக்கு தெரியல.....

டாக்டர் க்கு மனசு என்னமோ செய்ய தன் மூக்கு கண்ணாடியை கழட்டி கண்களை துடைத்து கொண்டு வெளியே சென்றார்.

தொடரும்

கடற்கரை (முடிவுற்றது)Where stories live. Discover now