மகாவின் தந்தை ஒருபக்கம் தேடுதல் வேட்டை... இன்னொரு பக்கம் அவனது தேடல் முயற்சி....இதை கேள்விப்பட்ட அன்பரசி தம்பியும் இந்தியா வர....ஒரே பரபரப்பாக இருந்தது ....
அவன் சிக்னல் வைத்து ட்ரேஸ் செய்தான்.....விரைவில் அவளை நெருங்குவான் ஆனால் அவன் இருப்பது வெகுதூரம்..... இவளோ தற்போது கடற்கரை பகுதி ஒன்றில் தனியே அமர்ந்து புலம்பிக்கொண்டிருந்தாள் "நான் நல்லவ இல்லை... நீ என்னை பார்க்க வராத மாமா..."
ஆனால் அவன் வருவான் என்று அவளுக்கு தெரியும்... எப்படி அவரை முகம் சந்திப்பேன் ..என்று அவள் நொந்து கொண்டாள்....
அவன் நெருங்கிவிட்டான் சற்று நேரத்தில் வருவான்...ஆம் பயணித்து கொண்டிருக்கிறான்...தான் இப்போது அவளை சந்திக்காமல் போனால் ஏதேனும் தவறு நேர்ந்து விட்டால் என்ன செய்ய....
அவள் இருக்கும் இடம் கடற்கரை பகுதி ஆள் நடமாட்டம் சற்று குறைவு ....அவள் அலைகளை வெறுத்து நோக்கியபடி அமர்ந்திருந்தாள்....இன்று அந்த அலைகளின் ஓசை அவளுக்கு பாரமாக இருந்தது ......
பின்னால் அவன் வந்துகொண்டிருந்தான்....அவளை பார்த்து விட்டான்...."அன்பரசி னு கூப்பிட மனம் தோன்றியது ஆனால் கூப்பிட வில்லை...... அவளருகே சென்று தோளில் தட்டினான்....
அவள் திரும்பினாள் அதே ராணுவ உடையில் அவன் .....ஆனால் அவன் அவனில்லை......பதறினாள்..
"நீ....நீங்க..... யா..ரு
அன்பரசி...ப்ளீஸ் நான் சொல்வது கேளு பொறுமையா..
உங்களுக்கு எப்படி ஏன் பேரு தெரியும்??,என் மாமா எங்க???
சொல்றேன் இரு....முதல்ல நீ ஏன் இந்த முடிவு எடுத்த??
அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு மிஸ்டர்... என் விஷால் எங்க ??
விஷால் எங்க னு இப்ப நான் சொல்ல முடியாது ப்ளீஸ் முதல்ல நீ உங்க வீட்டுக்கு போ...இல்லை உனக்கு என்ன பிரச்சனை அதை சொல்லுங்க அன்பரசி
மிஸ்டர்... ப்ளீஸ் எனக்கு எல்லாம் குழப்பமா இருக்கு....என்ன நடக்குது னு எனக்கு ஒன்னும் புரியல...நீங்க யாருன்னு எனக்கு தெரியல...
சரி அன்பரசி ....நான் சொல்றேன்....முதல்ல நீ ஏன் வீட்டை விட்டு வந்த....
நான் விஷால் கூட வாழ தகுதியற்றவள் ...அதான் அவர் என் முகத்தை பார்க்க கூடாதுனு வந்துட்டேன்.... அவரு இப்ப திருச்சி ல அப்பா அம்மா கூட தானே இருக்காரு???அவரு அங்கேயே இருக்கட்டும்... இங்க வர வேண்டாம் சொல்லிடுங்க மிஸ்டர்.
நான் சொன்ன அவரு கேப்பாறா அன்பரசி ???அவரால எதுமே கேக்க முடியாது
ஏன்...ஏன் சொல்லுங்க னு அவன் சட்டை யை உலுக்கினாள்...
மௌனமானான் ...அவனது மௌனம் பயத்தை ஏற்படுத்தியது....
தொடரும்
YOU ARE READING
கடற்கரை (முடிவுற்றது)
Romanceஇது ஒரு இராணுவ வீரனின் மனைவியின் தவிப்பு பற்றின காதல் கதை. அவனுக்காக அவள் காத்துக்கொண்டு இருக்கிறாள் .