2

527 31 31
                                    

அவளோட தையல் மாணவர்கள் எல்லாம் வந்து ப்ளவுஸ் எம்மிங் பன்றது கத்துகிட்டு இருந்தாங்க...அதுல ஒருத்தி
"அக்கா ...நீயுஸ் பார்த்திங்களா ..போர் நடக்குதாமே.

ம்ம்ம்..... ஆமா மா....என் கணவர் விஷால் கூட அங்க தான் இருக்காரு....என்ன செய்ய நாட்டுக்காக அங்க அவரு கஷ்ட படுறாரு என்ன பன்றது

அக்கா சொல்றனே னு தப்பா நினைக்காத....போர் முடியுற வரைக்கும் நீ பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலில் நெய் தீபம் ஏத்திட்டு வா....எல்லாம் நல்லதே நடக்கும்.

ம்ம்ம்.....

இதை பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போதே தன் என்னவனின் நினைப்பு வாட்டி வதைத்தது... அவருக்கு போன் செய்தாள்.
"என்னங்க....

சொல்லு மா...அன்பரசி..

தன் என்னவனின் குரல் கேட்டவுடன் அவளுக்கு மனதில் ஏதோ பட்டாம் பூச்சி அடித்தது....இறக்கை கட்டி பறப்பது போல் இருந்தது.

என்னங்க...... நீங்க எப்படி இருக்கீங்க??☺️

எனக்கு என்ன டி...நான் நல்லாயிருக்கேன். நீ நிம்மதியாக இரு .....ஹலோ ஹலோ......ச்ச சிக்னல் வீக்.

போன் கட் ஆனதும் அவனுடன் பேசிய த்ருப்தி இருந்தும் இல்லாதது போல் இருந்தது.....அன்பரசி பெயரில் மட்டும் இல்லாமல் குணத்திலும் அப்படிதான். இது தான் விஷாலுக்கு அவளிடம் பிடித்த குணம்.

ப்ளவுஸ் எம்மிங் முடிந்தவுடன் அவளுடைய மாணவிகள் எல்லாம் வீட்டுக்கு சென்றுவிட்டனர். தற்போது அவளுக்கு துணையாக இருப்பது அந்த மழைசாரல் தான்... ஜன்னலை திறந்து மழைச்சாரலை ரசித்து கொண்டிருந்தாள்.

கல்யாணம் அன்று அவனுடன் காரில் வரும் போது மழை பெய்து கொண்டிருந்த காட்சி நினைவுக்கு வந்தது....

"என்னங்க.... மழை னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.

எனக்கும் தான்....😀

அதை நினைத்தவாறு நின்றிருக்க ...மணி 5 ஆனது என்பதை உணர்ந்து... கிச்சனுக்கு சென்று காபி தயார் செய்தாள்....
காபி ல சக்கரை கம்மியா போட்டு குடிக்கிறது அன்பரசிக்கு மிகவும் பிடிக்கும். அந்த காபி கப்பை ஏந்தி கொண்டு வந்தாள்.....கையில் விஷாலின் போட்டோவை பார்த்து கொண்டு காபி பருகினாள்.

"ஏய் மாமா... சீக்கிரமே வந்து என்னை பாரு டா"னு மனசுல சொல்லி கொண்டே காபியை பருகினாள்.
அன்று கடற்கரை யில் விஷாலுடன் காப்பி பருகியது நினைவுக்கு வந்தது...

கையிலிருந்த காப்பி கப்பை கீழே வைத்துவிட்டு அவன் போட்டோவை வருடி கொண்டிருந்தாள் ....நேரம் போனதே தெரியவில்லை அந்த கடற்கரை வாசம் இன்னும் நியாபகத்தில் உள்ளது.

மீண்டும் அவள் போனுக்கு அழைப்பு வந்தது...தன் என்னவனாக இருக்ககூடும் என்று ஓடிச்சென்றாள். 😀

(யார் அந்த அழைப்பு)?👍

கடற்கரை (முடிவுற்றது)Where stories live. Discover now