கடற்கரைக்கு பின்னால் இருக்கும் ஸ்டெல்லா மேரிஸ் காலேஜ் க்கு தன் தம்பியை அழைத்து கொண்டு தன் தம்பி காதலித்த பெண்ணை பார்ப்பதற்காக சென்றாள்.
டேய் தம்பி ரொம்ப நேரம் ஆகுது அவள் வருவாளா வர மாட்டாளா
அக்கா கொஞ்சம் பொறு வருவா கண்டிப்பா...
டேய் பசி வர உயிரைக் கொல்லுது...
அக்கா அக்கா ஏதோதோ வந்துட்டா வந்தஇதோ இதோபாரு.....
டேய் மகாலட்சுமி மாதிரி இருக்காடா அந்த பொண்ணு..
அக்கா பார்க்க மட்டும் மகாலட்சுமி இல்ல அவ பேரு மகாலட்சுமி தான்...
சூப்பர்டா தம்பி அந்த பொண்ணு கிட்ட பேசலாம்... வா வா
... ஹலோ மகா நில்லுங்க...
சொல்லுங்க நீங்க யாரு..
பரத்தோட அக்கா ....என் பெயர் அன்பரசி .... உங்க கிட்ட பேசணும்...
என்கிட்ட நீங்க என்னக்கா பேசணும்
அது வந்து என் தம்பி உங்களை காதலிக்கிறாராம்... என்று அவள் பேச்சை இழுக்க... எதிர்முனையில் இருந்த மகா புரிந்து கொண்டாள்
அக்கா இங்கே பாருங்க உங்க தம்பி என்னை காதலித்தது உண்மைதான் ஆனால் அவர் பாட்டு அமெரிக்காவை உட்கார்ந்திட்டாரு ஒரு போன் இல்ல ஒன்னும் இல்ல மெசேஜ் அனுப்பினாலும் எப்பவாச்சும் ஒரு வாட்டி ரிப்ளை பண்றது... என்னை என்ன பண்ண சொல்றீங்க...
பரத் - உன் கோபம் எனக்கு புரியுதுடி... சரி வா உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்...
மகா - என்ன பேச வந்த... அதை சொல்லிட்டு நீ போயிட்டே இரு.. உன் மேல செம காண்டுல இருக்கேன் புரியுதா..
....
அம்மாடி இராட்சசி கொஞ்சம் பொறுமையா கேளு.. நான் அமெரிக்கா போனதில் இருந்து என்னோட வேலை அந்த மாதிரி.. என்னால சரியா யார்கிட்டயும் பேச முடியல... உன்னோட மெசேஜ் பாத்துட்டு ரிப்ளை பண்ணு வேணும்னு நினைச்சா அப்பதான் எங்க ப்ராஜக்ட் மேனேஜர் வருவான் இது என்ன பண்றீங்க சார் அதுஎன்ன பண்றீங்க சார் கேட்டுட்டு போவான்....இத்தனை நாள் நா ஒரு வாட்டி கூட இந்தியா வந்ததும் என்ன பாக்க தோனல ல...
நான் இந்தியா இப்பதாண்டி வரேன். எனக்கு அக்கா னா உசுரு அவளையே நான் இத்தனை நாள் பார்க்காம இருந்தேன் நீ வேணும்னா அவர்கிட்டயே கேளு. வந்ததும் வராததுமா உன்னை பார்க்க தானடி செல்லம் வந்தேன்...ஏன் இப்படி கோபிக்கிற......
ஹாய் எல்லாரும் என்ன பாக்குறீங்க..இவங்க லவ் எப்படி ஆரம்பம் ஆச்சுனா????
பரத்தும் மகாவும் டென்னிஸ் கிளாஸ் ல ஒன்னா மீட் பன்னவங்க...டென்னிஸ் பயிற்சி எடுக்க இரண்டு பேரும் வருவது வழக்கம் அங்க தான் மீட் பன்னாங்க....காதலும் அப்படி தான் ஆரம்பம் ஆச்சு...
அப்புறம் இவன் அமெரிக்க போயிட்டான் கான்டாக்ட் இல்லாம போச்சு.... 😀
😀😀😀😀😀
அன்பரசி....இவங்களுக்கு ப்ரைவேசி தந்துட்டு ஒரு கூல்ட்ரீங் கடைல வந்து உக்காந்தா.....எதையோ யோசிட்டே இருந்தா.....ஆப்பிள் ஜூஸ் பருகிய படி .
தன்னை விட்டு பிரிந்து இருக்கும் விஷால் எப்ப தான் இங்க வருவாரோ....அவரு வந்த கையோட தம்பி கல்யாணம் முடிச்சிடனும் அப்படி இப்படி நிறைய யோசித்து கொண்டிருந்தாள். அதற்கிடையில் தம்பி வந்தான்"அக்கா...என்ன அப்படி யோசிக்கிற ??,
ஓ...வந்துட்டியா நீ....
ம்ம்ம் அவளை விட்டுட்டு வந்துட்டேன் பஸ் ஸ்டாப் ல...
ஆமா...நீ ஏன் டா அவளை இப்படி தவிக்க விட்டு வேடிக்கை பார்க்கிற பாவம் டா அவ....
அக்கா....எனக்கென்ன ஆசையா ...என் வேலை அப்படி..... அவளுக்கு பைனல் இயர் முடியபோது ....அங்க நான் வேலை செய்யுற கம்பெனி ல வேலை ரெடி பன்னிட்டேன்.....இனிமே அவ என் பக்கத்தில் தான் இருப்பா😀
ஓ......
என்ன ஓ.....
ஒன்னுல டா....நீ நினைச்சா அவளை உன்கூட வெச்சிக்கலாம் ...ஆனால் நான் என் விஷால் கூட போய் அங்க இருக்க முடியாது ல....
அக்கா.....ப்ளீஸ் பீல் பன்னாத....
தன் தம்பியின் வார்த்தை களில் ஆறுதல் கிடைத்தவுடன் கண்களை துடைத்து கொண்டாள்.
....தொடரும்
YOU ARE READING
கடற்கரை (முடிவுற்றது)
Romanceஇது ஒரு இராணுவ வீரனின் மனைவியின் தவிப்பு பற்றின காதல் கதை. அவனுக்காக அவள் காத்துக்கொண்டு இருக்கிறாள் .