அன்பரசி நான் சொல்றது பொறுமையா கேளு....பதற்றம் ஆகாத நான் விஷால் கூட பணியாற்றும் ராணுவ வீரன் என் பேரு "கரண்"...தமிழ்நாட்டை சேர்ந்தவன் தான்.... நானும் விஷாலும் நண்பர்கள்... உன்னை பற்றி விஷால் நிறைய சொல்லிருக்கான் அன்பரசி....உங்க இரண்டு பேரோட காதல் வலி எனக்கு தெரியும். ஆனால் போரில் ஏற்பட்ட பீரங்கி தாக்குதலில் உன் கணவனுக்கு அதாவது விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது ...அதிர்ச்சி ல அவனோட மூலை குழம்பி போய் இப்ப தான் யாருன்னு தெரியாத நிலையில் கோமாவில் படுத்துக்கொண்டு இருக்கிறான்....
இவ்வளவு நாள் உன்னிடம் பேசியது விஷால் இல்லை... விஷால் குரலை இமிடேட் செய்தபடி நான் தான் பேசினேன்...ஆனால் நீ என்னை தப்பா நினைக்காத மா....இது எல்லாம் நான் உன்னை நிம்மதியாக வச்சிக்க தான் பன்னேன்.....அடுத்தவன் மனைவி கிட்ட பேசிறோமே னு மனசுல பதற்றம் வரும் ஆனால் ஆபத்துக்கு ஏது பாவம் னு ...நான் அவன் குரலில் பேசி உனக்கு நிம்மதி அளித்தேன் அவ்வளவு தான்... என்னை மன்னிச்சிறு ப்ளீஸ் .......
அன்பரசி செத்த பிணம் போல் அப்படியே நின்றாள்....கண்ணீர் மட்டும் வலது கண்ணில் கோடிட்டு வழிந்து கொண்டிருந்தது....அதிர்ச்சியில் அவள் எதுவும் பேசவில்லை .......
"என் விஷால் இப்ப எங்க ????என்ற கேள்வி மட்டும் வெளியே வர...
"அவரை நான் டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளேன் ...என்று கரண் பதிளளிக்க..உரைஞ்சு போய் நின்றாள்.
என்னை அங்க கூட்டிட்டு போவிங்களா மிஸ்டர் கரண் ப்ளீஸ்....
ம்ம்ம்... கண்டிப்பா.....ஆனால் இந்த விஷயம் வயதான அவன் பெற்றோருக்கு தெரிய வேண்டாம் அன்பரசி.....சரி அது போகட்டும் நீ ஏன் வீட்டை விட்டு வந்த ??? என்ன நடந்தது?????
இதை கேட்டவுடன் மீண்டும் அழ துவங்கினாள்...."மிஸ்டர் கரண் ...நான் என் விஷால ரொம்ப மிஸ் பன்னேன் அவரு எப்ப வருவாறு னு ஏங்கி போய் இருந்த சமயத்தில் ......
சமயத்தில்????சொல்லு மா....
அது....அது...வந்து.......
YOU ARE READING
கடற்கரை (முடிவுற்றது)
Romanceஇது ஒரு இராணுவ வீரனின் மனைவியின் தவிப்பு பற்றின காதல் கதை. அவனுக்காக அவள் காத்துக்கொண்டு இருக்கிறாள் .