💜D-3💜

5.6K 174 5
                                    


"இவனா?? இவன் எங்க இங்க??"'னு யோசிச்சிட்டு அவனையே பார்த்துட்டு இருக்கா ரம்யா.

"ஹலோ... கொஞ்சம் வழிவிட்டீங்கன்னா உள்ள போவேன்"

"...." வழி விட்டுட்டு கூடவே போறா. இவன் என்ன சொல்ல போறான். இன்னிக்கு என்ன எதோ மர்ம நாவல்'ல வர்றது போல ஒவ்வொன்னும் மர்மமா இருக்கு.

விசாலினி, பாட்டி, புவனா எல்லோரும் இவனையே பார்க்கறாங்க. அப்போ புவனா,

"ஏங்க இங்க வாங்க... சீக்கிரம் வாங்க..."

"என்ன?? கத்தாதீங்க'னு சொன்னேன்'ல" சொல்லிகிட்டு வரும் போது அங்க நிக்கற புதியவனை பார்க்கறார்.

"வாங்க.. நீங்க??"

"ம்கூக்கும்... ஏங்க இவன் தான் கோவில்'ல???"

"......"

கேட்டதும் அவனை அளவிடுறார். அவனும் எல்லாரையும் பார்க்கறான் ஒரு நொடி அதிகமா விசாலினியை பார்த்துட்டு திரும்பவும் ஹால்'ல உள்ள போட்டோஸ் பார்க்கறான்.

"சொல்லுங்க தம்பி???? ஏன் இப்படி செஞ்சீங்க??? "'னு அருணை பார்க்கறார்.

என்ன பொறுமையா கேட்டுகிட்டு இருக்கார்'னு புவனா அதிசயமா தன் கணவனை பார்க்கறா.

விசாலினி ஏன் இப்படி பண்ண'ங்கறது போல அருணை பார்க்கறா. ரம்யா என்ன நடக்குது'னு குழப்பத்தோட பார்க்கறா. பாட்டி இந்த பையனை நாம்ம எங்கயோ பார்த்து இருக்கோமே'னு யோசிக்கறாங்க.

அப்போ அருண், "எல்லோரும் வந்தாச்சா??? இன்னொருத்தர் வரனுமே???"

"யாரது???"

"ஹீரோ"

"யாரு"

"அதான் நவீன்"

எல்லாரும் புரியாம பார்க்கறாங்க. அப்போ அருண் எல்லாரையும் பார்த்துட்டு ரம்யாகிட்ட "உனக்கு என்ன தெரியுமா??? எதோ தெரிஞ்சவன பார்க்கறது போல பார்க்கற?? என்ன விசியம்??"

"ரொம்ப தான்... எயினி அண்ணா தானே நீ???"

"எயினியா" எல்லாரும் கோரஸா கத்தறாங்க.

தேவதையே நீ தேவையில்ல (completed)Donde viven las historias. Descúbrelo ahora