💜D-14💜

4.4K 153 10
                                    


அப்படி இருந்தும் நொடிக்கு ஒருமுறை பார்வை அவளையே சுத்தி சுத்தி வர்து.... அருனை பார்த்த நவீன்'க்கு அருண் மேல நம்பிக்கை வர்து... கண்டிப்பா அவளை நல்லா பார்த்துப்பான்.... ஏனா அவன் அருனோட பார்வையை வச்சியே முடிவு பண்ணிட்டான்... விசாலினி-அருண் கண்டிப்பா நல்லா இருப்பாங்க'னு... எயினியை பார்க்கறான். 

எயினி வேற எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்கா... அய்யோ கடவுளே.... இவ ஏன் இப்படி இருக்கா'னு அவளை கூப்பிட்டு அருனை காமிக்கறான்... அப்போ அருண் விசாலினி பார்க்க கூட மாட்றாளே'னு கொஞ்சம் கடுப்பா அவளை பார்க்கறான்.. உள்ளுக்குள்ள சாலி பாருடி... சாலி பாருடி...'னு ஆனா அதை கொஞ்சம் கூட புரிஞ்சிகாத எயினி அவன் விசாலினியை முறைக்கான்.. அதை தான் தன்கிட்ட குறையா நவீன் சுட்டி காட்றான்'னு ரொம்ப தப்பா நினைச்சிட்டு பரிதாபமா பார்க்கறா..... ஆனா அவளோட பார்வைய பார்க்காம நவீன் அருன் – விசாலினியை பார்த்துட்டு இருக்கான்...

எயினிக்கு அழுகையா வருது... ச்சே... நா பண்ண தப்பால தான் அருண் அண்ணா இப்படி பண்றான்... பாவம் விசாலினி... என்னால தான் அவ கஷ்டபட்றா... ச்சே...'னு உள்ளயே feel பண்ணிட்டு இருக்கா... அப்போ நவீன்'னும் எயினியும் மோதிரம் மாத்திக்கறாங்க.. பெரியவங்க எல்லாருக்கும் ரொம்ப நிறைவா இருக்கு'னு சந்தோசமா இருக்காங்க... ஒரே போட்டோஸ்'னு அந்த மொமண்ட் நல்லா போகுது...

நாளைக்கு காலையில கல்யாணம்... சீக்கிரம் எழுந்துக்கனும்'னு சொல்லி சீக்கிரம் வாங்க'னு கூட்டிட்டு போறாங்க... எல்லாரும் ரூம்'க்கு போனதும், அப்போ எயினி விசாலினியை பார்க்க வர்றா....

"விசாலி..."

"ம்ம்ம்???" எதோ சொல்ல போறா போல'னு ஆர்வமா பார்க்கறா.

"உனக்கு என் அண்ணாவை பிடிச்சி இருக்கா...?"

"நாளைக்கு கல்யாணம் எயினி... இப்போ கேட்கற???"

"அது வந்து???? அண்ணா உன்னை hurt பண்றானா????"

"அதெல்லாம் இல்ல...."

"அண்ணா உன்கிட்ட பேசுனானா???"

"ஹேய் உனக்கு இப்போ என்ன வந்தது????"

தேவதையே நீ தேவையில்ல (completed)Donde viven las historias. Descúbrelo ahora