காரிலிருந்து இறங்கினதும், "ம்மா... எங்க வந்திருக்கோம்??? பாப்பாவை கூட்டிட்டு வீட்டுக்கு தானே போகனும்???"
"ம்ம்ம்ம்... உன் புருஷன் கிட்ட கேளு" சொல்லிட்டு இருக்கும் போதே, பல கொண்டாட்டத்தோட குழந்தையும், விசாலியையும் உள்ள அழைச்சிட்டு போறான் அருண்.
"பாபுகுட்டி... பாருடா... உங்கப்பாவை... உனக்காக அழகான இந்த வீட்டை வாங்கியிருக்கான். நீ தான் இந்த பாட்டி, தாத்தாவை பார்த்துக்கனும். நீ வந்ததுமே உங்கப்பா எவ்ளோ யோசிக்கறான் சொல்லி, அனு கொஞ்சிட்டு இருக்காங்க. அப்போ தான் விசாலிக்கு எதோ புரியுது. ஆனாலும் எதும் சொல்லாம அமைதியா இருக்கா. அருண் விசாலியை அடிக்கடி பார்த்துட்டு இருக்கான்.
எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து பேசிட்டு இருக்காங்க. அப்போ எயினி சொல்றா. பாப்பா அப்படியே விசாலி மாதிரி தான்.. இல்லண்ணா? கேட்டுட்டு, எதோ ஞாபகம் வந்தது போல,
"அண்ணா.. உனக்கு ஞாபகம் இருக்கா? விசாலினி போட்டோ எல்லாம் கல்யாணத்திற்கு முன்னாடி காமிச்சேன்ல?" சொல்லும் போது, விசாலினி எயினியையும், அருணையும் மாறி மாறி பார்க்கறா. அருண் சொல்லாத'னு கண்ணை காமிக்கறான். எயினி எதோ புரிஞ்ச மாதிரி எழுந்து போறா.
"இன்னும் என்ன மறைக்கறீங்க???? சும்மா கடுப்பேத்தாதீங்க."
"ஹேய்... என்ன உன் பிரட்சனை???"
"எயினி என்ன சொல்ல வந்தா??"
"அதுவா? எனக்கு முன்னாடியே உன்னோட போட்டோ காமிச்சு பொன்னு எப்படி இருக்கு?னு கேட்டா, அப்போ நான் குண்டா இருக்கா... வேணாம்'னு சொல்லிட்டேன்.. அதை தான் சொல்ல வர்றா."
"என்னை முன்னாடியே தெரியுமா??"
"அப்படியெல்லாம் சொல்ல முடியாது. ஆனா அவ உன் போட்டோவை காமிச்சதும், அப்போவே எனக்கு நீ தான் தோணுச்சு. ஆனா கோவத்தில எதோ பண்ணிட்டேன். சாரிடா.. நீயும், பாப்பாவும் தான் இனி எல்லாம். ஆனா ப்ளீஸ்... இனி எதுனாலும் வாயை திறந்து சொல்லு. போதும் நாமப்பட்ட கஷ்டம்."
"அதுசரி.. ஆனா நீங்க ஏன் என்னை கண்டுக்கவேயில்ல???"
"அப்படியில்ல... நா வரும்போது நீ டயர்டா தூங்குவ.. அப்பறம் நா உன்கூட நீ தூங்கும் போது மட்டும் தான் இருக்க முடிஞ்சிது. கொஞ்சம் பிஸி. நிஜமா.."
"ம்ம்ம்ம்"
"அப்படியும் அம்மாகிட்ட கேட்ப்பேன். அம்மா தான் நீ என்னைய இவ்ளோ பண்றீயே.. பாவம் அவ.. அவளை டிஸ்டர்ப் பண்ணாத'னு சொன்னாங்க. நானும்........ அதான்......"
"அதான்... சாக்கு'ன்னு நல்லா வேலை பார்த்தீங்க."
"கொஞ்சம்.."
"உங்களை.." சொல்லி லைட்டா தலையோட தலையை முட்றா.
"அப்பா... இப்போ தான் என் பொண்டாட்டிக்கு சிரிப்பு வருது. ஏண்டி இதுக்கா இவ்ளோ கோவம்.. நீ கூட தான் எனக்கு கூப்பிடவே இல்ல... எனக்கும் தான் தோணுச்சு... இவ ஏன் என்கிட்ட பேசவேயில்ல'னு... நான் ஒன்னும் உன்னை மாதிரி லூசு போல யோசிக்கலயே??? "
"சாரி"
"இனி இதுபோல பண்ணாதடா... ப்ளீஸ்..."
"ம்ம்ம்ம்ம்ம்" சொல்லி அழுவுறா. அவளை சமாதானப்படுத்திட்டு,
"போடி லூசு"
"நா லூசு தான்.. உங்க மேல... சாரி" சொல்லி அருனை கட்டிக்கறா. அவனும் சந்தோசத்தோட கட்டிக்கறான். இரண்டு பேரும் ரொம்ப நாளைக்கு அப்பறம் சந்தோசமா சிரிச்சு பேசிக்கறாங்க. அதை அழகா ஒரு குட்டிகரடி டிஸ்டர்ப் பண்ணுது. ஆனா அதுவும் கூட சந்தோசத்தை கொடுக்குது. ஆமாங்க... அது அவங்களுக்கு குட்டிகரடி இல்ல.. குட்டி தேவதை.. அழகு தேவதை.. இனி எப்போதும் சந்தோசம் மட்டும் தான்.
..சுபம்..😎
VOCÊ ESTÁ LENDO
தேவதையே நீ தேவையில்ல (completed)
FantasiaHero - Arunprasad Heroine - visalini ... ..... ......... ............ ................. Ivanga life'la enna nadakkuthu...??? Devathai thevaiilla'nu yen solraru...?? Story ulla poyi paarkalam.