எல்லாரும் நவீன் வீட்டுக்கு வராங்க. நவீனுக்கு ஏனோ ரொம்ப பதட்டமா இருக்கு... ஆனா எயினி யாருக்கோ பிரட்சனை போல ரொம்ப அசால்ட்டா வர்றா. வீடு திறந்து இருக்கு. ஆனா யாருமே இல்லாதது போல ஒரே அமைதி. அந்த அமைதிய கெடுக்கறத்துக்குனே மாடியிலிருந்து இறங்கி வர்றா ரம்யா. அவளோட எக்ஸ்ரே கண்ணுல தப்பிக்காம கரெக்ட்டா எல்லாரும் உள்ள வர்றாங்க.
"ஹேய்.... ப்பா.......அ"
எல்லாரும் வர்றாங்க. அப்போ நவீன் வந்து அவங்க அப்பா'ட்ட,
"ப்பா... சாரி ப்பா... "
"ஏன்பா சாரி எல்லாம்.... நாங்க வேணாம்'னு முடிவு பண்ணிட்டியா??"
"ப்பா"
"பேசாத ப்பா... ஆண்பிள்ளை, ஆண்பிள்ளை'னு செல்லம் கொடுத்தேனே... நீ கேட்டதெல்லாம் செஞ்சேனே... நல்லா மரியாதை செஞ்சிட்டப்பா...வேணாம்பா போதும் விட்று..."
நவீனுக்கு இவ்ளோ நாள் ஒரு வார்த்தை கூட திட்டாத தன் அப்பா தன்னை வெறுத்தது போல பேசினதும் ரொம்ப அழுகையா வருது. அவனையே பார்த்துட்டு இருந்த எயினி அதை தாங்க முடியாம, முன்னால வந்து,
"சாரி அங்கிள்... என்மேல தான் தப்பு... நவீன் பாவம்... அவனை திட்டாதிங்க."
"ஆமா மா. உன் புருஷன். எனக்கு திட்ட உரிமையில்ல தான்."
"அங்கிள் நா அப்படி..."
எயினி அப்பா வந்து, தன்னை அறிமுக படுத்திட்டு, பேசறார்
"எங்களுக்கும் வருத்தம் தான். ரொம்ப செல்லம் கொடுத்தோம்... அதான் நம்மளை தலை குனியவிச்சிட்டாங்க.. இருந்தாலும் உங்க பிள்ளை பேர்ல தப்பு இல்ல... எல்லாமே நாங்க பெத்த, பாசமா வளர்த்த இந்த பொண்ணால தான். அவ தான் எதோ பண்ணி இப்படி பண்ணியிருக்கா."
"நம்ம யாரும் இவங்களுக்கு தேவை இல்லயாமா....??? அந்த பொண்ணு சொன்னா இவனுக்கு எங்க போகுது புத்தி???? இந்தோ இவனுக்கு அப்பறம் இரண்டு பொண்ணுங்க இருக்காங்க..."
"என்னங்க??? சம்பந்தம் பேசறீங்களா?? என்ன எங்களை பார்த்தா எப்படி தோணுது???? எங்க உங்க பையன்??? அவனை காணும்???? ரொம்ப வந்து பேசிட்டு இருந்தான். நவீனை விடுங்க. அவனை பத்தி கவலை பட வேண்டிய அவசியமில்லை. அவன் ஒன்னும் எங்களை மதிக்கல... ஆனா இவ???? இவ என்ன பண்ணா'னு உங்க பிள்ளை இப்படி பண்ணான்.???? அவனெல்லாம் படிச்சவனா??? முட்டாள்... அவன் எங்க போனான்...??? ஏண்டா நவீன் இப்படி பண்ண??? விசாலினி பத்தி உனக்கு தெரியாதாடா???? அவ புள்ளபூச்சி... அவளை இப்படி மாட்டி விட்டுடீயேடா. அவளுக்கு உன்ன எவ்ளோ பிடிக்கும்??? அவளை பத்தி யோசிக்கலயேப்பா நீ???" சொல்லி எயினி அப்பா'கிட்ட ஆரம்பிச்சி நவீன் கிட்ட வந்து முடிச்சிட்டு அழுவுறாங்க புவனா.
நவீனுக்கு ஒன்னும் புரியல. விசாலினியை பார்க்கறான். அவனுக்கு ஒன்னும் வித்தியாசம் தெரில. அவளுக்கு என்ன??? நல்லா தானே இருக்கா'னு நினைச்சிட்டு இருக்கும் போதே, ரம்யா வந்து எயினிகிட்ட,
"உன்மேல தான் தப்பு'னு உன் அப்பாவே சொல்றாரு... ஆனா ஏன் உன் அண்ணா இப்படி செஞ்சான்...???"
"என்ன பண்ணான்???" எயினி சாதரணமா கேட்கறா?????. ஆனா நடக்கறதை எல்லாம் பார்த்ததும் எதோ தான் பையன் வந்து கஷ்டபடுத்தி இருக்கான்'னு புரிஞ்சிகிட்டார். ஆனா தான் பையன் என்ன செஞ்சி வச்சானோ'னு பதட்டத்தில,
"என்னமா ஆச்சி சொல்லு"'னு ரம்யா கிட்ட கேட்கறார் எயினி அப்பா. நவீன், எயினி, எயினி அம்மா, எயினி அப்பா,மிதுன் எல்லாரும் ஆர்வமா பார்க்கறாங்க.
ரம்யா நடந்த கதை அத்தனையும் சொல்றா. வீட்டுக்கு வந்து அருண் பண்ணது, கோவில நடந்தது எல்லாத்தையும் சொல்லிட்டு இப்போ என்னா பண்ண போறீங்க...??? உங்களுக்கு எதும் தெரியாதா???
நவீன் ரொம்ப ஷாக்'ல இருக்கான். எயினி'க்கும் ஆச்சிரியமா இருக்கு... அவ நவீனையே பார்க்கறா. அவனோட ஒவ்வொரு ரியாக்ஸனையும் பார்க்கறா. இப்போ என்ன பண்ண போறானோ??????????????????😎
![](https://img.wattpad.com/cover/174821122-288-k345963.jpg)
أنت تقرأ
தேவதையே நீ தேவையில்ல (completed)
خيال (فانتازيا)Hero - Arunprasad Heroine - visalini ... ..... ......... ............ ................. Ivanga life'la enna nadakkuthu...??? Devathai thevaiilla'nu yen solraru...?? Story ulla poyi paarkalam.