💜D-25💜

3.7K 124 0
                                    


ஆனா அவ ஏன் இப்படி பண்ணா??????? அவளுக்கு தான் என்மேல எந்த எண்ணமும் இல்லயே.. வெக்கம் வரவேண்டிய நேரத்தில வெக்கம் வர்றதுல்ல... நான் பார்க்கும் போது அவ கண்ல காதல் தெரியறது இல்ல. அப்பறம் எதுக்கு??? இப்படியே யோசிச்சி தலவலி தான் வந்தது.

இரவு வீட்டுக்கு கொஞ்சம் தாமதமாவே வர்றான் அருண். ஆனா அவனை எதிர்பார்த்து டைனிங் ஹாலிலே உட்கார்ந்து மொபைலை பார்த்துட்டு இருக்கா விசாலி. அவன் வந்ததும் அவன் பின்னாடியே போயி சீக்கிரம் ஃபிரஸ் ஆயிட்டு வாங்க. சாப்பாடு எடுத்து வைக்கறேன். ஆனா அருண் பேசவேயில்லை. விசாலிக்கு வித்தியாசம் தெரில.

விசாலி சாப்பாடு பறிமாறிட்டு அருணை பார்க்கறா. அவன் சாப்பாட்டில கவனமா இருக்கான்.

"சமையல் எப்படி இருக்கு????? நானே சமைச்சேன். அத்தையும், மாமாவும் சூப்பரா இருக்கு'னு சொன்னாங்க."

"ம்ம் நல்லா இருக்கு."

"உங்களுக்கு இன்னும் எதும் வேணுமா??"

"இல்ல போதும்."

உடனே அவளும் உட்கார்ந்து அவனோடவே சாப்பிட்றா. அவன் அவளை பார்க்கறான். ஆனா எதும் கேட்கல. அந்த பார்வையின் அர்த்தம் புரிஞ்சி,

"நீங்க வந்ததும் சாப்பிடலாம்'னு வெயிட் பண்ணேன்"

அருண் ஆச்சிரியமா பார்க்கறான். அவ வெயிட் பண்ணேன்'னு சொன்னது ஷாக். அவ அதுக்கும் மேல தான் கேட்காமலே என் பார்வையை வச்சே சொல்லிட்டாளே. சபாஷ். நா தான் அவளை தப்பா புரிஞ்சிட்டேன் போல. என்மேல இஷ்டம் இல்ல.. என்னைய புரிஞ்சிக்கல'னு.. ஆனா என் சாலி வேற லெவல்'னு மனசுல நினைச்சுட்டே அவளை பார்க்கறான்.

"நிஜமாவா?? எனக்காக வெயிட் பண்ணியா??"

"ஆமா... காலையில, மதியமும் நான் சாப்பிட்றதுக்கு முன்னால நீங்க சாப்பிட்டிங்களான்னு கேட்க கால் பண்ணேன். ஆனா நீங்க தான் என் காலை பிக் பண்ணல."

"சாலி நிஜமா நீ தானா???"

"ஆமா... நா தான் விசாலினி"னு சொல்லி சிரிச்சிட்டே அன்னைக்கு அவ என்ன பண்ணா??? எந்த சமையலை எப்படி சொதப்பினா???னு கதை சொல்லிட்டு இருக்கா. ஆனா அவன் தான் அவ சொல்ற எதையுமே கேட்கல. அவளையே ஆச்சிரியமா பார்த்திட்டு இருக்கான். இவ எப்பலையிருந்து இப்படி மாறினா'னு யோசிக்கறான். அதே நேரம் அணு விசாலினியும், அருணும் பேசி சிரிச்சிட்டு இருக்கறதை பார்த்து இவங்க எப்பவும் சந்தோசமா இருக்கனும் கடவுளே'னு வேண்டிட்டு போறாங்க.

தேவதையே நீ தேவையில்ல (completed)Where stories live. Discover now