சுற்றுலா நேரம்

1.5K 76 18
                                    

அப்பொழுது வகுப்பிற்கு ஒரு சர்குலர் வந்தது. இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகள் சுற்றுலா செல்வதற்கான சர்குலர் அது.. அதை வாசித்ததும் மாணவ மாணவிகள் அனைவரும் ஆர்ப்பரிக்கத் தொடங்கினர்.

உடனே வகுப்பாசிரியையான கலா "ஏய் சத்தம் போடாதீர்கள்.. அமைதியாக இருங்கள் ,அமைதியாக இருங்கள்" என்று பெஞ்சை தட்டினார்..கல்லூரியில் இருந்து வெளியூர் சுற்றுலா அழைத்து செல்கின்றனர்.

அதை வாசித்ததும் மாணவ மாணவிகளின் முகத்தில் உற்சாகம் களைக்கட்ட தொடங்கியது . அப்பொழுது சுற்றுலாவிற்கு என்ன கொண்டு செல்லலாம்?? எவ்வாறு செல்லலாம்?? என்று அனைவருக்குள்ளும் டிஸ்கஷன் போய்க் கொண்டிருந்தது.

அது மட்டுமல்ல அனைவருடைய வீட்டிலும் அனுமதிப்பார்களா?? என்று ஒருபக்கம் டிஸ்கஷன் போய்க்கொண்டிருந்தது..
மாணவர்கள் அனைவரும் "டேய் இந்த சுற்றுலாவை நல்லா ஜாலியா என்ஜாய் பண்ணனும்" என்று அவர்களுக்குள் ஒரு பக்கம் பேசிக்கொண்டிருந்தனர் .. மாணவிகள் "தங்கள் வீட்டில் அனுமதிப்பார்களா??" என்று மறுபக்கம் பேசிக்கொண்டிருந்தனர்..

இவ்வாறு மாணவ மாணவிகள் தங்களுக்குள் கலந்து பேசிக் கொண்டிருந்தனர்.கலா மேடம் நிற்பதையே மறந்து விட்டனர்.  உடனே கலா மேடம் உரத்த குரலில் "நான் இப்பொழுது உங்களுக்கு இதை வாசிக்க வேண்டுமா?? வேண்டாமா?? முதலில் நீங்கள் பேசுகிறீர்களா?? இல்லை நான் பேசவா?? என்று கேட்டார்..

உடனே அனைவரும் அவரிடம் "நீங்களே சொல்லுங்க  மேடம்" என்று சத்தமிட்டனர் ..உடனே அவர் வாசிப்பதைத் தொடர்ந்தார். உங்களை சுற்றுலா நாங்கள் அழைத்துச் செல்கிறோம் .எனவே அதற்குத் தேவையான பொருள்கள் எல்லாம் உங்க வீட்டில் இருந்து எடுத்துட்டு வந்துடுங்க.

அடுத்த வாரத்திற்குள் சுற்றுலா  கட்டணத்தையும் வீட்டில் இருந்து வாங்கிட்டு வந்திடுங்க ..நமக்கு நாள் எல்லாம் ஃபிக்ஸ் பண்ணி இருக்காங்க . நம்ம கிளாஸ் அடுத்த வாரம் போறோம். ஓகேவா!! அதுக்கு நீங்க எல்லாரும் ரெடியாயிருங்க ..

"வீட்டிலே போய் மறக்காம  பெர்மிஷன் லெட்டர் வாங்கிட்டு வந்திருங்க" என்று எல்லாரிடமும் அட்வைஸ் கொடுத்தார்.. உடனே மாணவ மாணவிகள் அனைவரும் "ஓகே மேடம், நீங்களே சொல்லிட்டீங்க.. இனி  நாங்க வராம இருப்போமா?? நாங்க எல்லாரும் கண்டிப்பா வருவோம்" என்று எல்லோரும் சேர்ந்து கூறினர்.

சுவாதியின் முகம் மட்டும் களையிழந்து காணப்பட்டது. அதை கதிர் பார்த்து சுவாதிக்கு என்னவாயிற்று?? என்று யோசித்தான்.

வானாகி நின்றாய்(Completed)Wo Geschichten leben. Entdecke jetzt