நிர்மலாவின் கதை

1.2K 61 20
                                    

நானும் நிலாவின் தந்தையும் ஒரே பேட்சில் தான் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றோம் .அவரும் நானும் இணைந்து ட்ரைனிங் சென்றோம் ..

அவர் என் கடினமான சமயங்களில் எனக்கு ஊக்கம் தந்தார்..அப்பொழுது அவருக்கும் எனக்கும் நட்பாக இருந்த பழக்கம் காதலாக மாறியது.. இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தோம்..

ட்ரெய்னிங் முடிந்ததும் வீட்டில் பேசி திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று மகிழ்ச்சியாக கிளம்பினோம்..

என்னுடைய வீட்டில் என் அண்ணன் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு..என் பெற்றோர் கொஞ்சம் மனமாறினர்.. ஆனால் என் அண்ணன் கடைசி வரைக்கும் ஒத்துக்கொள்ளவில்லை .

நிலாவின் தந்தை வீட்டில் அனைவரும் ஒத்துக் கொண்டார்கள். பிறகு நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக அவர்கள் ஆசியுடன் என் பெற்றோர் மற்றும் அண்ணன் இன்றி திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினோம் .

அப்பொழுது எங்கள் இருவருக்கும் போஸ்டிங் போடப்பட்டது.. நிலா தந்தைக்கு ஒரு ஊரிலும் எனக்கு ஒரு ஊரிலும் போஸ்டிங் வந்தது..

அப்போதுதான் எங்கள் இருவருக்கும் இடையில் பிரச்சனை ஆரம்பமானது . எனக்கு போஸ்டிங் வந்த சமயத்தில் நான் கர்ப்பமாக இருந்தேன்.

எனவே நிலாவின் தந்தை என்னை வேலைக்கு செல்ல வேண்டாம், "நீ வேலையை விட்டுவிட்டு வீட்டிலேயே இரு" என்று கூறினார்.

எனக்கு ஐபிஎஸ் ஆவது வாழ்நாள் லட்சியம் என்பது என் கணவருக்கு தெரிந்தும் போக வேண்டாம் என்று கூறியது எனக்கு அதிர்ச்சியை தந்தது..நிலாவின் தந்தை வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று பிடிவாதமாக கூறினார்.

ஆனால் "எனக்கோ வேலைக்கு கண்டிப்பாக சென்றே ஆகவேண்டும். இந்த வேலை என் பல வருட கனவு.எனவே நான் வேலையை விடத் தயாராக இல்லை"..

இருவருக்கும் இடையில் சிறிதாக இருந்த  சண்டைப் பெரிதாக ஆரம்பித்தது.. பிறகு நான் அவரிடமிருந்து பிரிந்து தனியாக வந்தேன்..நான் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன்.

வானாகி நின்றாய்(Completed)Where stories live. Discover now