நிலா தந்தை மரணம்

1.3K 70 14
                                    

நிலாவின் தந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர்..அவருடைய உடல்நலம் தேறியது..ஆனால் சிகிச்சை பலனின்றி அன்று இரவே மர்மமான முறையில் உயிர் நீத்தார்..

நிலா தன் தந்தையை எண்ணி உடைந்துப் போக அவளது தோழி சுதா அவளுக்கு ஆறுதலாக இருந்தாள்.கதிரின் பெற்றோர் ஹேமாவை நிலாவுடன் தங்க வைத்தனர்..

அப்பொழுது சுவாதியும் ஆறுதல் சொல்ல நிலா வீட்டிற்கு வந்தாள்.நிலாவை ஆறுதல் படுத்தினாள்.அந்த சமயத்தில் கூட கதிர் அவளிடம் ஒரு‌ ஆறுதலுக்காகக் கூடப் பேசவில்லை.

கதிர் சுவாதியிடம் செய்து கொடுத்த சத்தியம் தான் பெரிது என்று இருந்தான்…அனைத்தையும் ஹேமா பார்த்துக் கொண்டேதான் இருந்தாள்.கதிர் நிலா வீட்டிற்கு வரவே இல்லை.கதிர் நிலாவை வந்து சந்திக்கவும் இல்லை.மாறாக அவன் சுதாவை அனுப்பி அவளுடனேயே இருக்குமாறு அறிவுறுத்தினான்.

ஹேமாவிற்கு கதிர் சுவாதியின் காதல் பற்றி சுதா மூலமாக தெரிய வந்தது.சுதா ஹேமாவிடம் “ஆனாலும் உன் அண்ணன் நிலாவை சும்மாவாவது  வந்து பாக்க வந்துருக்கலாம்..சுவாதி என்ன மந்திரம் போட்டாலோ தெரியல ..அவ தான் உலகம்னு சுத்துரான்..நிலா அவனுக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணிருக்கா.. அத கூட மறந்துட்டான்” என்று கூறினாள்.

ஹேமா வீட்டுக்கு சென்று கதிரிடம் “டேய் நிலாவ ஏன் பாக்க போகல?? அவ தனியா இருக்கா..போடா” என்றாள்..

உடனே கதிர் “உன் வேலையை பாருடி ராக்காயி கெழவி”..என்றான்..

உடனே ஹேமா “உன்னை சுவாதி போகக் கூடாதுன்னு சொன்னாளா?? இப்போ எல்லாம் உன் மூளை வேலை செய்வது இல்லையா?? சுவாதி சொல்றத மட்டும் தான் பண்ணுவியா?? நீ போ இல்ல போகாத..இனி நிலா நம்ம வீட்ல தான் இருப்பா..அத உன் சுவாதியால தடுக்க முடியாது ..போய் சொல்லு” என்றாள்..

ஒரு பக்கம் அன்பான தந்தையின் மரணம் , இன்னொரு பக்கம் தோல்வியுற்ற காதல். இரண்டிற்கும் மத்தியில் செய்வதறியாது நின்றாள் நிலா.

தீபக் நிலா வீட்டிற்கு வந்தான். அவளுக்கு ஆறுதல் கூறிவிட்டு "உனக்கு என்ன வேண்டும் என்றாலும் தயங்காமல் என்னிடம் கேள்..நான் உனக்கு எப்பவுமே உறுதுணையாக இருப்பேன்..சுதா மாதிரி நானும் உனக்கு ஒரு ஃபிரண்ட் தான்" என்றான்..

வானாகி நின்றாய்(Completed)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ