கேம்பஸ் இன்டர்வியூ

1.3K 76 22
                                    

கல்லூரியில் நேர்முகத் தேர்வு நாள் வந்தது .நேர்முகத் தேர்விற்கு நிலா பல மாற்றங்களுடன் வந்தாள்..கண்ணில் அணிந்திருந்த கண்ணாடி இல்லை…உடையில் மாற்றம் என்று அப்படியே சிட்டி கேர்ல்  போல் இருந்தாள்…

நிலா வந்திருக்கிறாள் என்று தெரிந்ததும் கதிரும் தீபக்கும் ஓடி வந்தனர்… கதிரை பார்த்ததும் நிலா புதுவிதமாக பேசினாள்.. தன் நண்பனிடம் பேசுவது போல் பேசினாள்.. அவள் பழைய நிலாவாக வரவில்லை..அவள் கண்களில் காதல் இல்லை..

ஹாய் கைஸ் , எப்படி இருக்கீங்க?? ஹவ் ஸ் யூர் லைஃப் கோயிங் ஆன்?? என்று கேட்டாள்..

தீபக் “வாவ் சூப்பர் நிலா.. யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ்..வி ஆர் ஃபைன் ..பட் நீ இல்லாம காலேஜ் ரொம்ப போர் அடிக்குது..எனக்கு மேச்சிங்கா டிரெஸ் போட கூட ஆள் இல்ல” என்று சிரித்தான்..

உடனே நிலா தீபக்கிடம் “டேய் எனக்கு ஒரு டவுட்டு.. எப்படி எனக்கு மேட்சிங்கா நீ கரெக்டா டிரஸ் போட்டுட்டு வர்றே..நான் உன்கிட்ட சொல்றது இல்ல..ஹூ இஸ் தேட் பிளாக் ஷீப்?? என்று கேட்டாள்..

அது வேற யாருமில்லை.. உன் வீட்டுல வேலை பார்க்கிற கலா அக்காதான்.. எங்க வீட்டு பக்கத்துல தான் வேலை பார்க்குறாங்க.. நான் அவங்களோட மொபைல் நம்பர் வாங்கி வைத்திருந்தேன்.. நீ மார்னிங் என்ன கலர் டிரஸ் போடுறேன்னு நான் அவங்ககிட்ட கேட்பேன்.. அவங்க என்கிட்ட இன்ஃபார்ம் பண்ணுவாங்க.நானும் உன்னை இம்ப்ரெஸ் பண்ண போட்டுட்டு வருவேன்.. என்று சிரித்தான்.

உடனே நிலா “அடப்பாவி!! அந்த கலா அக்காவ முதல்ல வேலைல இருந்து தூக்குறேன் பாரு” என்று சிரித்தாள்..

கதிர் அமைதியாக நின்றுக் கொண்டிருந்தான்..கதிரால் நிலா தன்னிடம் யாரோ மாதிரி பேசுவதை தாங்க முடியவில்லை..எனக்கு பழைய நிலா வேண்டும் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்…

நிலா கதிரிடம் “என்ன கதிர்? எதுவும் பேசாம இருக்க?? இன்டர்வியூக்கு எல்லாம் ப்ரிப்பேர் பண்ணியாச்சா??ஏன் அமைதியா நிக்குற?? ஏதாவது பேசு” என்றாள்..

வானாகி நின்றாய்(Completed)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ