பெங்களூர் பயணம்

1.5K 73 24
                                    

சுற்றுலா

சுற்றுலா பேருந்து பெங்களூரு நோக்கி நகர்ந்தது..
அப்போது சுவாதி கதிர் இருக்கை நேராக வேண்டுமென்றே போய் அமர்ந்தாள்.நிலா மற்றும் சுதா கதிருக்கு பின்னால் இருந்த சீட்டில் போய் அமர்ந்தனர் ..சுவாதி பஸ்ஸில் ஏறியதிலிருந்து கதிருடன் பேசிக்கொண்டே வந்தாள்.

கதிர் சுவாதியிடம் “ஏன் சுவாதி?? நீ ரொம்ப டல்லா இருந்த” என்று கேட்டான். உடனே சுவாதி “நான் இன்னைக்கு சுற்றுலாக்கு வந்திருக்கிறதே எங்க அம்மாவோட உதவினால தான்.. என் அப்ப என்ன அலவ் பண்ணவே இல்ல கடைசி வரைக்கும்.. என் அப்பா வேலை விஷயமா வெளியூர் போயிருக்காங்க.. அதனாலதான் என்னால வர முடிஞ்சுது" என்று கூறினாள்.

கதிரும் தன் வீட்டில் நடந்த விஷயத்தை கூறினான்.. இருவரும் சிரித்தனர்..
நிலாவிற்கு மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் அவள் தனது தோழி தானே என்று அதை ஈஸியாக எடுத்துக் கொண்டாள்..

நிலா வேறு சுவாதியிடம் கதிரைப் பிடித்திருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தாள். எனவே அவர்கள் நட்பாக தான் பேசுகிறார்கள் என்று தன்னைத் தானே ஆறுதல் படுத்திக் கொண்டாள்.
            
நிலாவின் கண்கள் கதிரை விட்டு நகர வில்லை.பேருந்தை விட்டு இறங்கி அனைவரும் பெங்களூரில் ஒரு விடுதியில் தங்கினர்.இரவு முழுவதும் மாணவ மாணவிகள் ஆசிரியைகள் அனைவரும் சேர்ந்து ஆட்டம் பாட்டம் போட்டனர்.

அப்போது மாணவ மாணவிகள் அனைவரும் “ஸ்பின் தி பாட்டில்” கேம் விளையாடினர்.

பாட்டில் கதிரைப் பார்த்து நிற்க, அவன் தைரியமாக ஏதாவது செய்தாக வேண்டும்.

அவன் சுவாதியை அழைத்து "ஐ லைக் யூ" என்றான்.உடனே மாணவர்கள் அனைவரும் ஓகோ என்று அவனை கலாய்க்க தொடங்கினர் என்ன ஐ லைக் யூவா?? ஐ லவ் யூவா?? என்று கேலியாக கேட்டனர். சுவாதியும்  சிரித்துக் கொண்டிருந்தாள் ..

நிலாவும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.ஆனால் மனதிற்குள் மிகவும் வருந்தினாள். வெளியே சிரித்தாள்.. மாணவர்கள் இப்படித்தான் சும்மா கலாய்ப்பார்கள் என்று அதை சீரியஸாக எடுக்கவில்லை..

வானாகி நின்றாய்(Completed)Where stories live. Discover now