முதல் கதாநாயகி

2.5K 96 11
                                    


கதாநாயகி

அவள் அழகான ஆங்கில வார்த்தைகளால் சரளமாக தன்னை அறிமுகம் செய்தாள்.வகுப்பில் இருந்த அனைத்து மாணவ மாணவிகளும் வாயைப் பிளந்து அவளையே பார்த்தனர். கதிருக்கு அவள் பேசுவது ஏதோ பாடல் பாடுவது போன்று கேட்க இனிமையாக இருந்தது..

உடனே ராம் கதிரிடம் "எவ்வா அவா, யாருடா நம்ம காலேஜில இவ்வளவு அழகாக ஆங்கிலம் பேசுவது" என்றான்.கதிர் அவளுடைய முகத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் எட்டி எட்டிப் பார்த்தான்..

ஆனால் அவளது முகத்தை அவனால் சரியாக பார்க்க முடியவில்லை .அந்த மாணவி அழகான பிங்க் சுடிதார் அணிந்திருந்தாள். அவளுடைய முடி நீளமாக  இருந்தது.அவளுடைய கன்னங்கள் கொஞ்சமாக தெரிந்தது அதில் விழுந்த டிம்பிள் தெரிந்தது  கதிருக்கு..

கதிர் மனதிற்குள் “யாரு இந்த பொண்ணு ?? ரொம்ப அழகா இருக்கா.. நல்லா போல்டா பேசுறா.இவ பிரண்ட்ஷிப் கிடைச்சா நல்லா தான் இருக்கும். இந்த பொண்ணு நம்ம கிளாஸ் தானே அப்புறம் பேசிக்கலாம்” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.

உடனே கதிர் ராமிடம் ஒன்றும் தெரியாதவன் போல் “இந்த பொண்ணு யாருடா?? ஓவரா இங்கிலிஷ் பேசி சீன் போடுறா?  அழகா  வேற இருக்கா?? பார்த்தா தலகனம் பிடிச்சவ மாதிரி இருக்கு" என்று அவளுடைய டீடெயில்ஸ் தெரிந்துக் கொள்ள கேட்டான்..

உடனே ராம் கதிரிடம் “டேய் நீ செமயா நடிக்கிறேடா.. நடிகர் திலகமே தோத்து போயிடுவாரு உன் நடிப்பில்"..நானும் இவ்வளவு நேரமாக உன்னைத் தான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் ..

யாரோ அவளை வெகுநேரமாக பார்ப்பதற்கு மிகவும் முயற்சி செய்கிறார்கள்.அதுமட்டுமா?? அவள் பேசுவதை நீ வாயை பொளந்து உன்னையே மறந்து பாத்துட்டு இருந்ததயும் நான் பாத்துட்டேன்..என்று சிரித்தான்..

"என்னை மாதிரி பசங்கள கூட நம்பலாம்.இந்த நல்லவன் வேஷம் போடுறவன நம்பவே கூடாது” என்றான்..

கதிர் ராமிடம் “நான் அவளுடைய ஆங்கிலத்தில் கவனம் செலுத்தியதால் அவள் என்ன கூறினால் என்பதை நான் கவனிக்கவில்லை என்றான். அவளுடைய குரலும் மென்மையாக இருந்தது .
அவள் பேசும் வார்த்தைகள், உச்சரிப்பு ஒவ்வொன்றும் ஸ்டைலிஷாக  இருந்தது” என்றான்..

வானாகி நின்றாய்(Completed)Onde histórias criam vida. Descubra agora