நவீன் முடிவு

1.1K 65 26
                                    

நவீன் முடிவு

உடனே ஹேமா கீழே தடுக்கி விழ நவீன் அவளை தன் கைகளால் தாங்கிப் பிடித்தான். இருவரும் ஒரு நிமிடம் ஒருவரையொருவர் பார்த்தவாறு அப்படியே நின்றனர் .

உடனே ஹேமா நவீனிடம் "சாரி, நீ வந்ததை நான் கவனிக்கல" என்று சொன்னாள்.. உடனே நவீன் "ஹலோ பெப்பர், உன் கவனம் எல்லாம் எங்க போச்சு.. இப்ப கொஞ்ச நாளா ஆளே சரி இல்லை ..ஏதோ மந்திரிச்ச கோழி மாதிரியே சுத்துறீங்க" என்று கேட்டான்...

உடனே ஹேமா மனதிற்குள் "உன்னாலதான்டா இப்படி சுத்துறேன்" என்று நினைத்தாள்..பிறகு ஹேமா நவீனிடம் "அதெல்லாம் ஒன்னும் இல்ல.. எனக்கு கொஞ்சம் தலைவலி.. அவ்வளவுதான் வேற எதுவும் இல்லை" என்று சொல்லி சமாளித்தாள்..

சரி!! உனக்காக நிலா வெயிட் பண்ணுறா.. அவ ஏதோ உன் கிட்ட பேசணுமாம்.. போ!! போ!! என்று ஹேமாவை நவீன் அனுப்பி வைத்தான்.

நிலா ஹேமாவை தன் அறைக்குள் அழைத்துச் சென்ற பிறகு கதவைப் பூட்டினாள்.. ஹேமாவிடம் நிலா "ஹேமா நீ என்கிட்ட உண்மையை மட்டும் தான் பேசனும்.. நான் கேக்குறதுக்கு நீ நேர்மையா ஆன்சர் பண்ணனும் என்று சொன்னாள்..

உடனே ஹேமா "என்ன நிலா?? எதுக்கு?? ஓகே!! நான் சொல்றேன்" என்று சொன்னாள்..

உடனே நிலா ஹேமாவிடம் "உனக்கு என்ன பிரச்சனை?? ஏன் நீ ரொம்ப டல்லா இருக்க?? உன் மனசுக்குள்ள ஏதோ ஒரு பிரச்சினை ஓடிட்டு இருக்கு.. என்ன பிரச்சனைன்னு சொல்லு.. நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்..

என்னால முடிஞ்சா கண்டிப்பா அது தீர்த்து வைக்க தான் பார்ப்பேன்..என்ன உன் கூட பிறந்த அக்காவா நினைச்சுக்கோ ..எதுவா இருந்தாலும் ஓப்பனாக சொல்லு.. என்கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு ஏதாவது பெரிய பிரச்சினை உனக்கு இருக்குதா என்ன?? என்று கேட்டாள்..

உடனே ஹேமா நிலாவிடம் அழத் தொடங்கினாள்.. உடனே நிலா "ஹேமா ,ஏய்!! அழாத.. ப்ளீஸ் டா.. அழாத.. அழுதா எந்த பிரச்சனைக்கும் சொல்யூஷன் கிடைக்காது. என்ன நடந்துச்சுன்னு சொல்லு.. நான் என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்றேன்" என்று கூறினாள்..

வானாகி நின்றாய்(Completed)Место, где живут истории. Откройте их для себя