ம்ருத்விகா...ம்ருத்விகா..எழுந்திரு..!!
சூரியன், தன் பணிக்கு வந்து பல மணிநேரம் ஆகிறது.உனக்காக அங்கு கலை ஆசிரியர் காத்துக்கொண்டிருக்கிறார் என்றாள் அனுஸ்மிதா.
சரி சரி எழுந்துவிட்டேன்.!! பத்து நிமிடத்தில் தயாராகிவிட்டு வருகிறேன் ....பொறு !!என்று மெத்தையை விட்டு எழுந்தேன்.
இப்படித்தான் தினமும் கூறுகிறாய்.ஆனால், எப்போதும் உனக்கு முன்பு' உனது தம்பியே அங்கு முதலில் இருக்கிறான் என்று அறையில் நுழைந்தவாறே கூறிக்கொண்டு வந்தாள் பவிக்கா.
பார்த்துக்கொண்டே இரு!!! இன்று நான் முதலில் செல்கிறேன்! என கூறினேன்.
தாம் சொல்வதில் அர்த்தமே இல்லை இளவரசி... தமது சகோதரன் ஏற்கனவே அங்கு தான் உள்ளார் என கூறிவிட்டு சிரித்தாள் பவிக்கா.அதை தொடர்ந்து அனுஸ்மிதாவும் சிரித்தாள்.
போதும் நீங்கள் சிரித்தது நான் சென்று விரைந்து வருகிறேன் இங்கேயே காத்திருங்கள்!! என்றேன்.
இல்லை இளவரசியாரே...'மகாராணியார் எங்கள் இருவரையும் அழைத்துள்ளார்.அதற்காகவே அனுவை கூப்பிட இங்கு வந்தேன் 'என்றாள் பவி.
என்ன விடயம் ??என்று சைகையிலே கேட்க ..தெரியவில்லை!! என்று அவளும் சைகையிலே சொல்லிவிட்டு சென்றாள்.
அப்போது வெளியில் கூச்சல் சத்தம் கேட்டது.
ஆதலால் அவர்ளை ஒரு நிமிடம் நில்லுங்கள் என கூறிவிட்டு வெளியே என்ன சத்தம் என்று கேட்டு கொண்டே சாளரம் வழியே எட்டிப்பார்த்தேன்.பணியாட்கள் ஒரு அறைக்குள் போவதும் வருவதுமாக இருந்தார்கள்.
வேள்விகான சடங்கு அரண்மனை பின்னே தானே நடக்கவிருக்கிறது.இங்கு என்ன பணியாட்கள் குழுமியிருக்கிறார்கள் என்று குழப்பத்தில் அனுவிடம் கேட்டேன்.வேறோன்றுமில்லை ம்ருத்விகா ...பாண்டுபுத்திரர் அர்ஜுனர் யாகத்திற்காக வருகிறாராம் !! அதற்காக தான் அறையை தயார் செய்கிறார்கள் என என்னிடம் கூறிவிட்டு இருவரும் அர்ஜுனர் வில்வில்தையில் "அவருக்கு நிகர் அவரே" என பலவாறு புகழ்ந்துகொண்டு சென்றார்கள்.
YOU ARE READING
அர்ஜுனராகம் (முடிவுற்றது)
Historical Fictionஇந்த நாவல் மூலம் கதாநாயகியின் காதல் பற்றியும் மகாபாரதத்தின் ஒரு பர்வமான சபாபர்வத்தில் இருக்கும் அர்ஜுனரின் திக்விஜயம் மற்றும் அர்ஜுனரின் மேலும் உள்ள சிறப்புகளை பற்றி அர்ஜுனராகம் என்னும் தலைப்பின் கீழ் கூற உள்ளோம். இந்த நாவல் அர்ஜுனரின் வீரம்,கடமை பற...