அர்ஜுனரின் அறைக்கு சென்ற போது அவர் சோர்வினால் உறங்கி கொண்டிருக்கிறார் என வாயிற்காவலன் கூற சென்ற வேகத்திலேயே மீண்டும் என் அறைக்கு வந்தேன்.
ஏன் வந்துவிட்டாய்?? என அனு கேட்க... அவர் உறங்கிவிட்டார் என்று அவளுக்கு பதில் கூறிவிட்டு எனது மெத்தை மேல் சோகமாக அமர்ந்தேன்.அதற்காகவா வருத்தம் கொள்கிறாய்!!... நாளை காலை பார்த்து கொலுசை வாங்கிக்கொள்ளலாம் என அனு கூறிமுடித்தவுடன் அவள் கொலுசு வாங்க தான் சென்றிருந்தால் என்று நினைக்கிறாயா!! அனு என பவி சிரித்தாள்.
பின்பு இல்லையா பவி...!! என்று அனு கூற ...எனக்கு அவர்கள் மேல் கோபப்படுவதா?? இல்லை என்னை நினைத்து சிரிப்பதா?? என புரியாமல் அவர்கள் பேசுவதையே கவனித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது பணிபெண் ஒருத்தி உணவு உண்ண அழைப்பு விடுத்தாள். அப்போது தான் எனக்கொரு சந்தேகம் வந்தது அர்ஜுனர் உணவு உண்ணாமலே உறங்கிவிட்டாரா?? என.. அப்போது பவி ...வா ம்ருது !!விரைந்து செல்வோம்!! என்றாள் . நான் அசைவேதுமின்றி அமர்ந்திருந்தேன்.என்ன யோசனை?? வா!! உணவு உண்ண செல்வோம்... என என் தோளை பிடித்து உலுக்க நான் எழுந்து நின்றேன்.பிறகு எனது கையை பிடித்துக்கொண்டு இழுத்துச்சென்றாள்.
உணவு உண்ண அமரும் வேளையில் எனக்கு எதிரே அர்ஜுனர் இருப்பதை கண்டு திகைத்தேன்.அனுவும் பவியும் அவரை கண்டு என்னிடம் வினவினர் ... உடனே நான் அவர்களிடம்,உறங்குவதாக காவலாளி உரைத்ததாக கூறினேன்.இருவரும் காவலாளி மேல் பயங்கர கோபம் கொண்டனர்.
பிறகு நான், "அவருக்கு யாராவது கட்டளை இட்டிருக்கலாம் இருவரும் கோபம் கொள்ளலாம் இருங்கள்" என்றேன்.பிறகு உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.அந்த சிறு நேரத்தில் நான் சாப்பிட்ட பிடியின் எண்ணிகை விட அர்ஜுனரை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்த எண்ணிகை அதிகம்.
பிறகு அனைவரும் உண்டுமுடித்து களைந்து அவரவர் அறைக்கு சென்றனர்.இப்போது அர்ஜுனரை பார்க்க செல்லலாமா என யோசித்தேன்.ஆனால் அவர் களைப்பாக இருப்பார்...!! என நினைத்த நான் காலையில் சந்தித்து கொள்வோம்...!! என எண்ணி அறைக்கு சென்று மெத்தை மேல் படுத்துக்கொண்டே நாளை அர்ஜுனரின் என்ன பேசுவது என ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தேன்.
YOU ARE READING
அர்ஜுனராகம் (முடிவுற்றது)
Historical Fictionஇந்த நாவல் மூலம் கதாநாயகியின் காதல் பற்றியும் மகாபாரதத்தின் ஒரு பர்வமான சபாபர்வத்தில் இருக்கும் அர்ஜுனரின் திக்விஜயம் மற்றும் அர்ஜுனரின் மேலும் உள்ள சிறப்புகளை பற்றி அர்ஜுனராகம் என்னும் தலைப்பின் கீழ் கூற உள்ளோம். இந்த நாவல் அர்ஜுனரின் வீரம்,கடமை பற...