அர்ஜுனராகம்2_(கீதம் 07)

65 3 1
                                    

கணபதி பூஜை தொடங்கி யாகம் நல்லபடியாக சென்று கொண்டிருந்தது.அங்கு ஆகுதியாக நெய் ,தானிய வகைகள் ,மஞ்சள்,மா பட்டை,வேம்பு பட்டை ,சந்தன மற்றும் அகில் கட்டைகள்,தேக்கு கட்டைகள் ,எண்ணெய் வகைகள்,வெற்றிலை,பாக்கு,கற்பூரம்,தூப இலைகள் ,புல் வகைகள் என குவிக்கப்பட்டிருந்தது.

தேசத்தின் நலன் வேண்டி செய்யப்படுகின்ற யாகம் ஆதலால் அனைத்து குடும்ப உறுபபினர்களும் கலந்து கொள்ளுமாறு அறிக்கை விடப்பட்டிருந்தது.எனவே அதன்பொருட்டு அனைத்து பிரஜைகளும் அங்கு குழுமி இருந்தனர்.

பஞ்ச பூதங்களின் சாட்சியாக செய்யப்பட்ட யாகம் எனவே ஐந்து குண்டங்கள் நிறுவப்பட்டிருந்தது.ஒவ்வொன்றும் ஒவ்வொறு வடிவில் அமைக்கப்பட்டு நேர்த்தியான வடிவில் இருந்தது.

யாகம் முடிவு பெறும் நேரம்... அதாவது திரயோதசி முடிந்து சதுர்த்தசி நடைப்பெற்று கொண்டிருந்த சமயம், அனைத்து பிரஜைகளிடமும் ஆகுதி பொருட்கள் வழங்கி அனைத்து தேவர்களையும் வணங்கி யாக தீயில் இடுமாறு கூறப்பட்டது.

அதன் பேரில் அனைவரும் முறையே தத்தம் குண்டங்களில் ஆகுதி இட்டனர்.அவர்கள் முடித்த பிறகு கடைசியாக நான் அர்ஜுனர் மற்றும் விஸ்வா மூவரும் ஆகுதி அளிக்க போனோம்.

எனக்கு முன்பே விஸ்வா ஆகுதி அளிக்க நான் அவன் பின்னே சென்று ஆகுதி இட்டேன்.நான் போட்ட அதே சமயம் அர்ஜுனரும் ஆகுதி இட யாகத்தீ மேலே வளர்ந்தது.

சற்று நேரத்தில், "ஆகாய குண்டத்திலிருந்து ஒரு வெற்று இடம் தோன்றி அதில் சக்கரம் உருவாக", "ப்ருத்வி குண்டம் மற்றும் ஜல குண்டம் முறையே மண் மற்றும் நீர் கலந்து அந்த சக்கரத்தின் மேல் விழுந்தது"."வாயு குண்டத்திலிருந்து காற்று உருவாக அந்த காற்று சக்கரத்தை சுழற்ற ஒரு அழகிய பானை உருவானது". பிறகு "அக்னி குண்டத்தில் உருவான தீ மூலம் அந்த பானையானது காய்ந்து தளம் இறங்கியது".

அதை எடுத்த விதாங்க முனிவர் என்னையும் என் தந்தையையும் அருகில் அழைத்தார்.என்னவாக இருக்கும்!!?? என்ற ஆவலுடன் அருகில் சென்றேன்.அந்த பானையை என்னிடம் தந்துவிட்டு, தங்கள் யாக ஆகுதியின் பலனாகவே தேவர்கள் மகிழ... இந்த பானை கிடைத்துள்ளது.

மேலும் இந்த யாகம் எப்போது முடியுமெனில்!! இந்த பானை கொண்டு சிவநாரயணருக்கு அபிஷேகம் செய்யும் போதே...!! அதை தங்கள் மகளே செய்ய முடியும் என முனிவர் என் தந்தையை பார்த்து கூறி முடிக்க...

அது சரி முனிவரே!! எந்த நீரை கொண்டு, எந்த ஆலயத்தில்?? என என் தந்தை கூற வர ... கூறுகிறேன் அரசே .. ஹசம்ய வனத்தில் ஒரு பழங்கோயில் உள்ளதை அறிவீர்கள் அல்லவா!! என்றார் முனிவர்.

ஆம்!! அது எங்கள் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட ஆலயம்.... ஆனால் அங்கு செல்வதற்கான வழி பன்னிரன்டு வருடங்களில் ஒரு முறை மட்டுமே தோன்றும். மேலும் தாங்கள் அறியாதது அல்ல !!...அதற்கு இன்னும் காலம் பல உள்ளது என்றார் என் தந்தை.

ஆம்!! ஆனால், தங்கள் புதல்வியால் அங்கு எப்போது வேண்டுமானலும் செல்ல முடியும் சென்று "ஹம்சயநரனையும் நராயிணி தேவியையும்" தரிசிக்க இயலும்.ஏனெனில் தங்கள் வம்சத்தில் ஏழு தலைமுறைக்கு பிறந்த முதல் பெண் வாரிசு இளவரசி ம்ருத்விகா.

எனவே, இவர்கள் மீது தங்கள் மூதாதையரின் ஆசிகள் குவிந்திருக்கிறது.எனவே அவர்களே அங்கு செல்ல தகுதியானவர்.

மேலும்,அந்த ஆலயம் செல்லும் முன்பு ஹசம்ய வனத்தின் காவலராக இருக்கும் வனலிங்கேஷ்வரரையும் வனதேவியையும் வணங்கி ஆசி பெறுதல் அவசியம் .அவர்கள் ஆசியோடே அந்த கானகம் செல்ல வேண்டும்.

மேலும் அந்த கானகத்தில் பல தடைகளை தாண்டி அந்த ஆலயம் அடைய இளவரசியோடு அவர் ஒருவர் மட்டுமே செல்ல இயலும்.அது யாரெனில்!!?? என முனிவர் கூறி முடிப்பதற்குள் நான் செல்கிறேன்!! என குரல் கேட்ட திசை நோக்கி அனைவரும் திரும்பினர்.அது விஸ்வா ....ஆனால் முனிவர் அவனால் தடையை கடக்க இயலாது!! என மறுத்துவிட்டார்.பிறகு எனது தந்தை முன்வர தாங்கள் யாகத்தின் மற்றொரு அங்கமாக பிரஜைகளுக்கு தானம் வழங்க இங்கிருப்பது அவசியம்... என கூற அந்த இடமே சலசலப்பில் ஆழ்ந்தது.

உடனே முனிவர் அனைவரும் சற்று அமைதி காப்பீர்களாக!!!. நான் கூறி முடிப்பதற்கும் எதற்கு இந்த வாதம். நான் பாண்டு புத்திரர் அர்ஜுனரை இந்த யாகத்திற்கு அழைக்க கூறிய காரணமே இதற்கு தான்.அவரை வைத்து கொண்டு எதற்கு இந்த சலனம் என கூற ....அவையே அமைதியானது.

அர்ஜுனரும் முனிவரும் எதையோ மெதுவாக உரையாடி கொள்ள பிறகு எங்களை நோக்கி வந்தனர்.பிறகு பிரஜைகளை தானத்திற்காக நாளை வர கோரி அறிவிப்பு விடுக்கப்பட்டு கலைந்து செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கீதம் இசைக்கும்...🎶

அர்ஜுனராகம் (முடிவுற்றது)Where stories live. Discover now