அர்ஜுனராகம்2_(கீதம் 08)

98 4 2
                                    

நானும் அர்ஜுனரும் கானகம் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து ரதத்தில் ஏறி செல்ல ஆரம்பித்தோம்.கானகம் வந்தவுடன் தேவையானவற்றை எடுத்து கொண்டு நடைப்பயணமாக அங்கிருந்து நகர்ந்தோம்.

மஞ்சள் வெயில் காலையை பளிச்சென்று காட்ட ...அந்த கானகத்தில் காவல் தெய்வத்தின் ஆலயம் அடைந்தோம்.

நான் அபிஷேகத்திற்காக நீர் எடுத்துவர சென்றேன்.அர்ஜுனரும் பூக்கள் மற்றும் ஊமத்தை பறித்து வருவதாக கூறி சென்றார்.நான் அருகிலிருந்த ஓடையில் நீரை எடுத்து விட்டு நடக்க ஆரம்பிக்க... யாரோ... என்னை பின் தொடர்வது போல் தோன்றியது.பின்னே திரும்பி பார்க்க ,யாரும் இல்லை.இருப்பினும், சிறிது பயமாக இருந்ததால் நான் விரைவில் நடந்து ஆலயம் அடைந்தேன்.

உடனே அர்ஜுனரும் அவ்விடம் வந்து சேர்ந்தார். எனக்கு சில மலர்கள் மட்டுமே கிடைத்தது.ஊமத்தை கிடைக்கவில்லை என்றார் அர்ஜுனர்.

நான் அதை ஓடையின் அருகில் கண்டதாக நியாபகம் எனவே அர்ஜுனரிடம் கூற, நான் எடுத்து வருகிறேன் என அர்ஜுனர் கூறி சென்றார்.நான் அவரது கையை பிடித்து வேண்டாம் எனக்கு பயமாக உள்ளது என கூற ....பயம் வேண்டாம்....!! நீ இந்த ஆலயத்தில் உள்ள வரை உனக்கு எதுவும் நேராது... என கூறிவிட்டு சென்றார்.

நானும் அங்கேயே இருந்தேன்.பிறகு சற்று நேரத்தில் அவரும் வர...இருவரும் வனலிங்கேஷ்வரர்கும் வனதேவிக்கும் அபிஷேகம் அர்ச்சனை பூஜைகளை முடித்துவிட்டு ஹம்சய நரர் ஆலயம் நோக்கி சென்றோம்.

மாலை நெருங்க தொடங்கியது.அப்போதும் சலசலவென சத்தம். இதை பற்றி அர்ஜுனரிடம் கூற அவருக்கும் சத்தம் கேட்பதாக கூறினார்.பிறகு முன்னும் பின்னும் கவனமாக பார்த்து ஹம்சயநரர் ஆலயம் அடைந்தோம். அப்போது அர்ஜுனர் மாலை ஆகிவிட்டது.குளித்துவிட்டு பூஜை செய்ய கோரி முனிவர் கூறினார் என அர்ஜுனர் கூற அங்கே எப்படி நீராடுவது என எனக்கு சங்கடமாக இருந்தது .

ஆனால் அவர் சென்று குளித்து உடை அணிந்து வந்துவிட்டார். நான் தயங்கிவாறே நிற்க ...எந்த தவறும் நிகழாது தாம் தைரியமாக நீராட செல்லலாம் என அர்ஜுனர் கூற நானும் நீராடி உடை மாற்றி வந்தேன். பின் இருவரும் ஆலயத்தில் நுழைய எனக்கு எனக்கு நெருக்கமான அனுபவமாக இருந்தது.அப்போது ஒரு முனிவர் அங்கு திடீரென தோன்றினார்.நான் பயத்தில் அர்ஜுனரின் பின் நின்று கொண்டேன். உடனே அர்ஜுனர் அந்த முனிவரின் பரிட்சயம் பற்றி கேட்டார்.

எனது பரிட்சயம் இருக்கட்டும்.முதலில் நீங்கள் இருவரும் யார்?? இங்கு என்ன செய்கிறீர்கள்...!!?? என முனிவர் கேட்க அனைத்தையும் அர்ஜுனர் விளக்கி கூறினார்.

இருப்பினும் மணமாகாத பெண்ணோடு தனியாக இந்த கானகத்தில் இருப்பது முறையல்ல..நான் ஆலயம் உள்ளே செல்ல அனுமதியும் வழங்க மாட்டேன் என முனிவர் கூற...நானும் அர்ஜுனரும் அதிர்ச்சியில் உறைந்தோம்.எவ்வளவு கூறியும் அவர் கேட்பதாக தெரியவில்லை.உடனே அர்ஜுனர் தன் வாளை உருவி தன் கையை கீறி அதில் வந்த இரதத்தின் மூலம் எனது நெற்றி வகிட்டில் குங்குமமாய் சூட நான் அதிர்ச்சியில் நின்றேன்.

நாங்கள் இனி கணவன் மனைவி ....இப்போதாவது உள்ளே செல்லலாமா என அர்ஜுனர் கூற அந்த முனிவர் மறைந்து போனார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.ஆனால் நான் எதுவும் காட்டி கொள்ளாமல் இருந்தேன்.அப்போது அர்ஜுனர் என்னை மன்னித்துவிடு ம்ருத்விகா. எனக்கு வேறு வழி தெரியவில்லை. பிரஜைகளின் நலனுக்காகவும் நாம் மேற்கொண்ட பணி முழுமையடையவும் இதைழதவிர வேறு நல்ல உபாயம் இல்லை என கூறினார். எனக்கு இதில் சம்மதமே.ஆனால் ஒரு கேள்வி.என்னை பிடிக்காமலா என்னை மணந்தீர்கள் என கேட்க அவர் கண்களில் நீர் மல்க இல்லை என தலையசைத்தார்..உடனே நான் அவரை அணைத்து கொண்டேன்.

பின்,இருவரும் ஹம்சயநரர் மற்றும் நராயிணி தேவிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்தோம்.

பிறகு இருவரும் அரண்மனை திரும்ப.... முதலில் எனது பெற்றோர்கள் கோபப்பட்டாலும் பிறகு ஏற்று கொண்டார்கள்.

உண்மையை கூற போனால் அர்ஜுனரோடு எனது மகளுக்கு மணம் முடிக்கவே ஆசை கொண்டிருந்தேன்.ஆனால் இவ்வாறு நடந்தது தான் கோபம் கொண்டேன்.என்னை மன்னியுங்கள் என என் தந்தை அர்ஜுனரிடம் மன்னிப்பு கோர.... அர்ஜுனரும் அவர் கையை பற்றி ,அதற்கு அவசியம் இல்லை!! மகாராஜா என கூறினார்.

பிறகு, அர்ஜுனர் ம்ருத்விகா திருமணம் கோலாகலமாக நிகழும் என என் தந்தை அறிக்கையிட்டார்.அதே போல் திருமணமும் நிகழ்ந்தது.

மனதில் வரித்தவனை மணந்த சந்தோசத்தில் அர்ஜுனரை அணைத்தவாறே அவருக்கு நன்றி கூறினேன்.

முடிந்தது....

அர்ஜுனராகம் (முடிவுற்றது)Kde žijí příběhy. Začni objevovat