சாளரம் அருகே செல்ல, மரத்தை உடைக்கும் சத்தம் கேட்டது.உடனே எட்டிப்பார்க்க யாரோ தோட்டத்தில் நடமாடுவது தெரிந்தது.இந்த நேரத்தில் அங்கு யார் உலவுகின்றது என தெரிந்துக்கொள்ள அவ்விடம் நோக்கி விரைந்தேன்.
மிக அருகில் செல்லாமல், தூரத்திலிருந்தே நின்று பார்போம் என மனம் உந்த, தோட்டத்தில் இருந்த மரம் பின்னே ஒளிந்து எட்டிப்பார்த்தேன்.
அந்த நபரின் முகம் நன்றாக தெரியவில்லை எனினும் அங்க பிரத்யங்கங்கள் எனக்கு பரிட்சயமான உருவமாகவே தோன்றியது.மீண்டும் நன்றாக உற்று நோக்கலாம் என எண்ணி மீண்டும் எட்டிப்பார்க்க சரம் தொடுக்கும் சத்தமும் நாண் இழுக்கும் சத்தமும் மரத்தில் அம்புபடும் சத்தமும் மட்டுமே கேட்டது.
இந்த இருட்டில் எவ்வாறு தெளிவாக அம்பு நாணில் பூட்டி இலக்கை அடிக்க முடிகிறது என அதிசயத்து யோசித்துக்கொண்டிருக்க, யார் அங்கே?? என்ற சத்தத்தை தொடர்ந்து நான் ஒளிந்திருந்த மரத்தில் அம்பு பட்ட ஓசையும் கேட்க திடுக்கிட்டு அலறினேன்.
பிறகு நானும் யார் அது?? இந்த இரவு நேரத்தில் வில்வித்தை பயில்வது!!? என எதிர்கேள்வி போட அந்த இளைஞன் என் அருகில் வருவது தெரிந்தது.
அவசரத்தில் பாதுகாப்புகாக எதையும் கொண்டுவராத நான்... பயத்தில் "நாரயணநாமம்" சொல்லி கொண்டிருக்க ஆச்சர்யம் எனக்கு காத்துக்கொண்டிருந்தது.அருகில் வந்தது வேறாரும் இல்லை... அர்ஜுனரே .
அவரை பார்த்த உடனே.... "தாங்களா"என அதிசயித்து கேட்க அவர் ஆம், என்றவாறே தலை அசைத்தார்.உடனே நான் எவ்வாறு இந்த இரவில் சரியாக அம்பெய்ய முடிகிறது என்றேன் .உடனே அவர் "ஓசையை கொண்டே" என்று பட்டும் படாமல் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
நான் கேட்ட கேள்விக்கு சரியான பதிலாக இருப்பினும் எப்போதும் இல்லாமல் இன்று ஏன் இவ்வாறு கூறி செல்கிறார் என்ற கேள்வியோடு வருத்தமும் மேலோங்கியது.
நான் ஏதேனும் தவறு செய்துவிட்டேனா ?? ஒருவேளை அவருக்கு உறக்கம் வந்திருக்க கூடுமா ?? இல்லை தூக்க கலக்கமா?? என பல கேள்விகள் மூளையில் உருண்டோட எனது உறக்கம் காற்றோடு கலைந்தது.
அவர் என்னை பற்றி தவறாகவும் பேசவில்லை....!!எனது கேள்விக்கு பதில் தராமலும் செல்லவில்லை ....!! இருப்பினும் ஏன் எனக்கு வலிக்க வேண்டும்!?? என எண்ணி எண்ணி இதயத்தை இரத்த வெள்ளத்தில் தத்தளிக்கவிட்டேன்.
பொழுது புலர்ந்தது... இரவு யாகத்திற்காக வேலைகள் தீவிர மும்முரமாக நடைபெற்று கொண்டிருந்தது.அனுவும் பவியும் கூட வேலைகளை இழுத்து போட்டு செய்துகொண்டிருந்தார்கள் .ஆனால் என்னால் சுறுசுறுப்பாக எந்த வேலையும் செய்யமுடியாது என உணர்ந்த நான், மீண்டும் என்னறைக்கு வந்தேன்.
சற்று நேரத்தில் அங்கு தாயார் வர, என்ன ஆயிற்று?? உடல்நலம் ஏதேனும் சரியில்லையா?? என எனது நெற்றியை தொட்டு பார்த்தார்.இல்லை அம்மா இரவு சரியாக உறங்கவில்லை!!... ஆதலால் தான் சற்று அசதியாக உள்ளது என்றேன்.
எனில் இப்போது உறங்கு.. இரவு யாகத்தில் உனது பங்கு முக்கியமானது என பண்டிதர் கூறியிருக்கிறார் எனும் போது இரவு நீ நன்றாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியம் என தாயார் கூறிவிட்டு சென்றார்.
நானும் உறங்க சென்றேன்.சற்று நேரத்தில் அர்ஜுனர் கூறிய அந்த சொல் வேறு வேறு இடங்களில் தெரிய கண்களை சட்டென்று திறந்தேன்.
அப்போது அங்கு அர்ஜுனர் மற்றும் வைத்தியரோடு அவ்விடம் அனுவும் பவியும் இருந்தார்கள்.எனது நாடியை வைத்தியர் பிடித்து பார்த்து சற்று மூலிகை சாற்றை பிழிந்து அனுவிடம் தர என்னை அனு பருக செய்தாள்.
பருகிய சில நொடிகளில் மயக்கம் வர தொடங்க... அர்ஜுனரை பார்த்தவாறே கண்களை மூடினேன்.மீண்டும் கண்விழித்து பார்க்கையில் சந்தியாகாலம் நெருங்கி இருந்தது.அப்போது அவ்விடம் அனுவும் பவியும் வந்து என்னிடம் வஸ்திரங்களை தந்து உடனடியாக தயாராகிவர மன்னர் கூறியுள்ளார் என கூறிவிட்டு சென்றனர்.
இரவு நெருங்க தொடங்கியது.நானும் தயாராகி யாகம் நடைபெறும் இடத்திற்கு சென்றேன்.
#கீதம்_இசைக்கும்...🎶
ESTÁS LEYENDO
அர்ஜுனராகம் (முடிவுற்றது)
Ficción históricaஇந்த நாவல் மூலம் கதாநாயகியின் காதல் பற்றியும் மகாபாரதத்தின் ஒரு பர்வமான சபாபர்வத்தில் இருக்கும் அர்ஜுனரின் திக்விஜயம் மற்றும் அர்ஜுனரின் மேலும் உள்ள சிறப்புகளை பற்றி அர்ஜுனராகம் என்னும் தலைப்பின் கீழ் கூற உள்ளோம். இந்த நாவல் அர்ஜுனரின் வீரம்,கடமை பற...