அர்ஜுனராகம்_(கீர்த்தனம் 04)

96 4 1
                                    

மகாராஜாவை ஏன் கோர்த்துவிட்டாய் ம்ருது!!..

நீயே பொறுமையாக தாயாரிடமும் அனுமதி பெற்றிருக்கலாம் அல்லவா?? என்றாள் அனு.

சற்று நேரம் அமைதியாகவே இருந்துவிட்டு ..அப்பா சமாளித்துவிடுவார் ;நீ ஏன் கவலை கொள்கிறாய்.எப்படியும் அம்மா பெண்பிள்ளையை ஏன் இந்த நேரத்தில் அனுப்புகிறீர்கள்?? என்று தான் கேட்பார்.அப்பாவிடம் அதற்கான பதில் நிச்சயம் இருக்கும்....நீ கவலை கொள்ளாமல் வா!! என்றேன்.

மகாராணியார் அவ்விடம் வந்ததால் இவ்வாறு கூறுவிட்டு வந்துவிட்டாய் ??..அவர்  அறைக்கு சென்றிருந்தால் எப்படி அனுமதி பெற்றிருப்பாய்?? என்று கேட்டாள் அனு.

அங்கேயும் இப்படி தான் வேகமாக சொல்லிவிட்டு தந்தையிடம் மீதம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு வந்திருப்பேன்.இதையெல்லாம் நினைத்து வருத்தம் கொள்ளாதே..

வா விரைவில் செல்ல வேண்டும்..அதற்கு தேவையானவற்றை எடுத்துவைக்க வேண்டும் என்று கூறிக்கொண்டே  அனுவை இழுத்துக்கொண்டு எனது  அறைக்கு சென்றேன்.

அங்கு பவி எங்களுக்கு முன்பே வந்திருந்தாள்.நீங்கள் அனுமதிபெற்றுவிடுவீர்கள் என்று தெரியும்... ஆதலால் நான் தேவையானதை எடுத்துவைத்துவிட்டேன்; வாருங்கள் செல்வோம் ;என்று எங்களுக்கு முன் சென்றாள்.

நீயும் அவளோடு செல் அனு..நான் எனது வாளை எடுத்துக்கொண்டு வருகிறேன் என்று கூறினேன்.அவளும் சென்றாள். எனது வாள் அருகிலிருந்த மேசையின் மீது இருந்தது.அதன் அருகே வில்லும் இருந்தது.அந்த சமயத்தில் அந்த வில்லே என்னை கவர்ந்தது.இது வரை அப்படி தோன்றியதில்லை.ஆனால் இன்று ஏன் இந்த மாயம்!!! புரியாத புதிராய் விளங்கியது.

பிறகு மனம் சொல்வதே வேத வாக்கென்று நினைத்து நானும் அதையே எடுத்துக்கொண்டு பவி மற்றும் அனுவை நோக்கி சென்றேன்.

அப்போது அங்கு விஸ்வா எதையோ அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தான்.நானும் அவன் மனம் மாறிவிட்டான் என்று நினைத்துக்கொண்டு வேகமாக அவ்விடம் சென்றேன்.நான் அவ்விடம் செல்லும் முன்னே அவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.

அர்ஜுனராகம் (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora