என்ன வழி அது !! என்ன யோசித்து வைத்துள்ளாய் கூறு என்று பவிக்காவிடம் கேட்டேன்.
கூறுகிறேன் ம்ருது.அதற்கு முன் தபதி ஆற்றங்கரை வரை சென்று வருவோம் வா என்றாள் பவி.
என்ன விளையாடுகிறாயா?? இப்போது சென்றால் திரும்பி வர இரவு நெருங்கிவிடும்.!!
மேலும் யோசனை கூறுகிறேன் என்று சொல்லிவிட்டு தபதிக்கு அழைக்கிறாய் எனக்கு ஆச்சரியமாக உள்ளது என கூறினேன்.ஆம்..இங்கேயே கூறு பவி.மேலும் இப்போது செல்ல மகாராஜா அனுமதி அளிப்பது யோசிக்க வேண்டிய விஷயம் என்றாள் அனு.
எனில் இருவருமே ஏதேனும் வழியை கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்!!!.நான் செல்கிறேன்!! என பவி கிளம்பிவிட்டாள்.
ம்ருது!! நாமும் பலமணி நேரமாக யோசிக்கிறோம் ..எந்த வழியும் தென்படவில்லை அவள் என்ன தான் கூறுகிறாள் என்று கேட்போமே..வா என்றாள் அனு.நானும் சரி என்று கூறிவிட்டு பவியை தேடி சென்றோம்.
பிறகு அவளிடம் நாங்கள் தபதிக்கு வருகிறோம்... ஆனால்!!! உனது யோசனை வேலை செய்யுமா??..நம்பலாமா?? என நான் கேட்டேன்.நூறு சதவீதம் சரியாக இருக்கும் அதற்கு முன் நீங்கள் இருவரும் சென்று மகாராஜாவிடம் அனுமதி பெற்று வாருங்கள்..செல்லுங்கள்!!செல்லுங்கள்!! என்றாள் பவி.
நடத்து நடத்து..!! இது உனக்கான நேரம் ஆட்டம் போடுகிறாய்.இருக்கட்டும் பிறகு பார்த்துக்கொள்கிறேன் என பவியிடம் அனு கூறிவிட்டு என்னை தந்தையிடம் அழைத்து சென்றாள்.
அவர் சபையின் வாயில் அருகே நின்று மந்திரியாரிடம் பேசிக்கொண்டிருநதார். அப்போது விஸ்வாவும் அங்கு வந்து தந்தை அருகே நின்றான். நானும் அவன் அருகே செல்ல, அவன் தள்ளி சென்றுவிட்டான்.
இருக்கட்டும்! என மனதில் எண்ணிக்கொண்டு ...அப்பா ! என அழைத்தேன். அவர் என்னை பார்த்ததும் மந்திரியாரை அனுப்பிவிட்டு என்ன மகளே?? .. என்ன வேண்டும் ??என்றார்.
அது வந்து ....ஒன்றுமில்லை தந்தையே!! என்று திரும்பி கொண்டேன்.அப்போது அனு சைகை காட்டி அவரிடம் பேசு !!என கண்களை உருட்டினாள்.
மீண்டும் திரும்பி தந்தையே என நான் அழைக்க... நீ எதையோ என்னிடம் கூற தீவிரமாக இருக்கிறாய் என தெரிகிறது என்று அவர் கூற..எனது முகமெல்லாம் வியர்த்துவிட்டது.
ஏன் இப்படி வியர்கிறது??..ஏதேனும் பிரச்சனையா..உடல்நிலை சரியில்யையா ?? இல்லை ,விஸ்வா ஏதேனும் கூறினானா??...சொல் மகளே?? என்ன ஆனது..நீ இப்படி தயங்குவது பார்த்தால் எனக்கு பயம் அதிகரிக்கிறது!! என்றார்.
பிரச்சனை ஏதும் இல்லை தந்தையே!! பயம் வேண்டாம்;.. நான் தபதி வரை செல்ல வேண்டும் ..அதற்கு தங்களின் அனுமதி வேண்டும் ;என கூற...
இப்பொழுதா ??
சென்று வர தாமதம் ஆனால் இரவு நெருங்கிவிடுமே!! ..ஏதேனும் முக்கிய வேலையா!!..நீ மட்டும் தனியாகவா செல்ல போகிறாய் ??என்று கேட்டார்.ஆம் தந்தையே முக்கிய வேலை தான்.நாங்கள் மூவரும் செல்கிறோம் தந்தையே..என கூறிவிட்டு ...பிறகு ,விஷயம் என்னவென்றால்...என்று ஆரம்பிப்பதற்குள்...
முக்கியவேலை எனில் சென்றுவா மகளே. சென்றுவிட்டு விரைவில் திரும்பிவிடுங்கள்.எந்த விளக்கமும் தேவையில்லை.ஆனால் செல்வதற்கு முன் உன் தாயிடம் கூறிவிட்டு செல். இல்லையேல் மகளுக்கு மட்டும் எந்த விதியும் பொருந்தாதா? என கேள்வி கேட்பாள் என கூறினார்.
ஆமாம்... உங்கள் மகளிடம் என்னை பற்றி குறை கூறுவதை மட்டும் மறக்காதீர்கள்!! என எனது தாய் கூறிக்கொண்டே அவ்விடம் வந்தார்.நானும் தந்தையும் அவரை பார்த்து சிரித்தோம்.
பக்கத்தில் அனு எந்த அசைவும் இன்றி நின்றிருந்தாள்.அவளை பார்த்து என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள் அனு..ம்ருதுவிடம் கேட்டால் வேறு ஏதேனும் கூறுவாள். நீ கூறு மகளே என்று என் தாய் அனுவிடம் கேட்டார். அவளையும் சரி பவியையும் சரி தன் மகள் போல தான் பாவிக்கிறார்.அதனால் அனு எதற்கு செல்கிறோம் என அனைத்தையும் கூறிவிடுவாளே என நினைத்து..நானே கூறுகிறேன் என்று என் தாயின் கைகளை பிடித்தேன்.
நாங்கள் முக்கிய வேலையாக தபதி வரை சென்றுவருகிறோம்.இதை தங்களிடம் தந்தை கூற சொன்னார் என வேக வேகமாக தாயிடம் கூறிவிட்டு ..
தாயை சமாளித்துவிடுங்கள் தந்தையே என்று அவரிடம் கூறிவிட்டு அனுவை கூட்டிக்கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடி வந்தேன்.
நீ செய்தது சரியா என அனு கேட்க..நான் என்ன செய்தேன் என்று அவளை பார்த்துக்கேட்டேன்.
கீர்த்தனம் தொடரும்...🎶
CZYTASZ
அர்ஜுனராகம் (முடிவுற்றது)
Historyczneஇந்த நாவல் மூலம் கதாநாயகியின் காதல் பற்றியும் மகாபாரதத்தின் ஒரு பர்வமான சபாபர்வத்தில் இருக்கும் அர்ஜுனரின் திக்விஜயம் மற்றும் அர்ஜுனரின் மேலும் உள்ள சிறப்புகளை பற்றி அர்ஜுனராகம் என்னும் தலைப்பின் கீழ் கூற உள்ளோம். இந்த நாவல் அர்ஜுனரின் வீரம்,கடமை பற...