கணேஷ் தோழிகள் மூவரையும் ஓர் அறை உள்ள அப்பார்ட்மெண்டில் தங்க வைத்தான் மறுநாள் தான் ஆஃபீஸ் செல்ல வேண்டும் என்று ஒருநாள் ஓய்வெடுங்கள் என்று கூறி சென்றான்.
ஆனால் தோழிகள் மூவரும் இந்த ஊரை சுற்றி பார்க்கவே வந்ததனால் ஒரு நாள் கூட வீணடிக்க விரும்பவில்லை அதனால் சிறிது நேரத்தில் கிளம்பி ஊரை சுற்ற கிளம்பினார்கள்.
தோழிகள் மூவரும் ரெடி ஆகி அவர்கள் அப்பார்ட்மெண்டின் பக்கத்தில் உள்ள diamond கார்டனை சுற்ற சென்றனர் அது பக்கத்தில் உள்ளதால் மீதி உள்ளதை பின் பார்த்துக் கொள்ளலாம் என்று அங்கு சென்றனர்.
அங்கு சென்றதும் மூவரும் ஆளுக்கு ஒரு ஐஸ்கிரீம் கையில் வாங்கிக் கொண்டு அதனை சுவைத்துக்கொண்டே அங்கு இருந்த மரம் செடி கொடிகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.
அப்போது ரித்திகா "அங்க பாருங்கடி ஒருத்தன் செமயா இருக்கான்"
என்று கூற மற்ற இருவரும் அங்கு பார்க்க அவர்களும் அங்கு நின்ற அவனின் அழகில் மயங்கிப் போயினர்அமுதா "சூப்பரா இருக்காண்டி அப்படியே கடிச்சு திங்கலாம் போல இருக்கு"
ரித்திகா "அவர் lips பாத்தியா ஸ்ட்ராபெர்ரி மாதிரி இருக்குல்ல லிப்ஸ்டிக் யூஸ் பண்ணுவார்னு நினைக்கிறேன்"
அமுதா "என்னாச்சு நிலா நீ அமைதியா இருக்க ஆளு நல்லாத்தானே இருக்காரு"என்று அவளை திரும்பிப் பார்க்க
நிலா அனைத்து பற்களையும் காட்டி ஒருமுறை இவர்களைப் பார்த்து திரும்பி விட்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்
அமுதா "ரித்து நம்ம நிலாக்கு எதுவோ ஆயிடுச்சு"
ரித்திகா "ஏண்டி இப்படி ஒரு reaction கொடுக்கிற"
நிலா "நான் அவரைப் பார்த்ததும் அப்படியே என் கூட கூட்டிட்டு இங்கிலாந்துக்கு போயிட்டேன் ஏண்டி என்னம்மா இருக்கான் ஐயோ அப்படியே அவனுக்குள்ள போயிடனும் போல இருக்கு"
அப்போது அவர்கள் பக்கத்தில் இருந்து "ஐயோ காலம் எப்படி மாறிப்போச்சு முன்னாடி எல்லாம் பசங்கதான் பொண்ணுங்கள பார்த்து இப்படி வழிவாங்க இப்போ பொண்ணுங்க இப்படி பண்றாங்க" என்று தலையில் அடித்துக்கொண்டு ஒரு வயோதிக தம்பதி அவர்களைத் தாண்டிச் சென்றனர்.
ŞİMDİ OKUDUĞUN
நிலவோடு பயணம்
Romantizmமனைவியை இழந்து ஒரு குழந்தையோடு இருக்கும் ஹீரோவுக்கும் வெகுளியா இல்லையானு நம்மள குழப்ப போற ஹீரோயினுக்கும் நடுவுல ஏற்படுற காதல் காதல் மட்டும் (ஹீரோயின் டார்ச்சர் ஹீரோ டென்ஷன் at the same time ஹீரோ டார்ச்சர் ஹீரோயின் டென்ஷன்)