"டிர் டிர்ர்...."
சிறிது ரிங்கிற்கு பின் "The customer you are trying to reach is not answering your call" என்று விழியறியா அலைகற்றையின் தானியங்கி பெண் குரல் கேட்டது.
"அவள் குரல் கேட்க அழைத்தால் எவள் குரலோ கேட்கிறதே" என்று எனக்குள் சிரித்துக் கொண்டேன்.
"கொண்ட காரியம் செய்து முடிப்போம்" என்று, அவள் குரலைக் கேட்டு அலைபேசியின் வழி அவளுடன் இணைய மீண்டும் அழைத்தேன். முயற்சிகள் தோற்றன. சற்றே மனம் சோர்வுற்றது உடன் அச்சமும் கொண்டது.
"அய்யோ என்ன ஆச்சு? ஏன் எடுக்கல? எதாவது பிரச்சனையா? உடம்பு சரி இல்லையோ?" என்றெல்லாம் வேரற்ற மரமாக பல வினாக்கள் வளர்ந்தன. அவற்றிற்கு விடையறியவும், இப்போது கால்கள் அவளிடம் ஓட துடிக்கிறது. இருந்து என்ன பயன் நீண்ட இடைவெளி. எங்களுக்குள் இல்லை. நாங்கள் வசிக்கும் இடத்திற்குள். ஓடி அவளின் வீட்டை அடைய ஒரு நாள் சரியாகத் தேவை. அந்தளவிற்கு இடைவெளி. அவ்வாறே, சென்றாலும் மாமனார் உபசரிப்பு மாமியார் வீட்டில் தான். அதை நினைத்ததும் அடி வயிற்றில் புயல் ஏற்பட்டு சிரிப்பாக என் உதட்டின் வழி சிந்தியது. நேரமாகியது, இருந்தும் அவளிடமிருந்து அழைப்பு வரவில்லை.
காரணம் உபசரிப்புக்கு இன்னும் நேரம் கூடவில்லை போலும்.நான் இன்டர்நெட்டை ஆன் செய்ததும் whatsappபில் அவளிடமிருந்து
"Hi.", என்றொரு மெசேஜ் வந்திருந்தது. அதைத் தவிற வேரொன்றும் அம் மெசேஜில் இல்லை.பல முறை அழைத்தும் பதில் இல்லை. இப்போது, வெறும் "Hi." என்று ஒரே ஒரு மெசேஜ். என்னாயிற்றோ? ஏதாயிற்றோ? என்று சற்று நேரம் முன்பு பதறிய நெஞ்சம், இப்போது கோவம் உச்சந்தலையில் ஏறிக் கூத்தாட, எரிந்தது.
அதற்குள் ஒரு நிமிடம் ஓடி விட, அவளிடம் இருந்து... "online vandhum reply pana matiya ? avlo busy ?", என்று "தங்கப்ப தக்கம்" போல் பல துண்டாக வெட்டி ஒரு மெசேஜ் வந்திருந்தது.
அதைக் கண்டதும், ஆண் என்ற நெடிற் சொல்லின் ஆக்கம் என் தலைக்கேற, கூத்தாடும் கோபத்தோடு கைக்கோர்த்தது.
சொல்லவா வேண்டும்? அடுத்து என்ன நடுந்திருக்கும் என்பதை.
வழக்கமான காதலர்கள் போல் சிறிய 'பெரிய சண்டை.'சண்டையில்லை என்றால் ஓர் உறவில் "புரிதல்'' என்ற சுகம் கிடைக்காது. சண்டை மட்டுமே என்றால் "பிரிதல்" என்ற உறவு முறிதல் நிகழும்.
குறிலின் குரலில் கலக்கம் வந்தது. அது, அவளின் பதிலில் பிரதிபலித்தது. என் மேல் அவள் கொண்ட அன்பை நான் உணரவில்லை, என்று அவள்; அதை உணர்ந்ததன் பயன் தான் பேசவில்லை என்றால் வலி என் இதயத்தில், என்று நான்.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அளவறியாத அன்பால், தொலைவு என்ற தூரம் நினைவென்ற எண்ணத்துள் ஏகபோகமாக எங்களை இணைத்து வைத்தது.
நினைவில் அவளின் ஆக்கிரமிப்பு என்றாலும் முகத்தில் சிரிப்பு இல்லை. "காலம் நடக்க எங்களைக் காதல் இணைக்கும்" என்று உள் மனதுள் உறியடி கேட்க, அவளின் புகைப்படத்தைப் பார்த்து இடைவெளியை நிரப்புகிறேன்.
நெடிலும் குறிலும் நெருங்க விரும்பும் மழைக்காற்று மண் வாசத்துடன் வீச, மீண்டும் அவளுக்கு ஓர் அழைப்பு சென்றது என்னிடமிருந்து.....
YOU ARE READING
"என்னுயிர் காதலிக்கு,"
Short Storyஇன்னிசையைப் பிரிந்த மெளனத்தின் அழகான உயிரோவியம், இந்த "என்னுயிர் காதலிக்கு," வாருங்கள்! மெளனத்தின் போரொலியில் இன்னிசையைக் கேட்போம்.