பதினான்கு

69 6 0
                                    


"எங்கடா இருக்க?" என்று வினவினான், பார்த்தா.

பதில் சொல்லாமல், அப்படியே வண்டியை ஓட்டிக் கொண்டு போனேன். அழைப்பை துண்டிக்கவும் இல்லை. அவனே காற்றின் இரைச்சல் தாங்காமல், அழைப்பை துண்டித்தான். என் மன அலைகள் காற்றில் எதிரலைகளாகி, என்னை நினைவுகள் என்னும் குழிக்குள் தள்ளி மூடின. கண்கள் சாலையின் நடுவே வரைந்த வெள்ளைக் கோடுகளை உற்று நோக்க துவங்கின. ஒவ்வொரு கோட்டினைக் கடக்கும் போதும் உள்ளம் கிடந்து துடித்தது. கவனம் முழுவதும் கோடுகளின் மேல் பாய்ந்தது. என்னை அறியாமல், என் வலது கை வண்டியின் வேகத்தை கூட்டிக் கொண்டே சென்றது. இப்போது, வெள்ளைக் கோடுகள் வெகு விரைவாகக் கடந்தன. அதை விட வேகமாக, என் எண்ணங்களுக்குள் நான் புகுந்து விட்டேன். அங்கே வண்டியில், வெறும் உடல் மட்டும் பிரயாணம் செய்து கொண்டிருந்தது.

"போகும் போது நீ ஓட்டு. வரும் போது நான் ஓட்றேன்", என்றேன் சமநிலை நோக்கோடு.

"ம்.. சரிங்க சார்", என்றாள் தலையை அசைத்துக் கொண்டே, மெல்லிய இதழோரப் புன்னகையோடு!

வண்டியில் அவளோடு செல்வது, அதுவே முதன் முறை. உள்ளுக்குள்ளே குளிர்ந்த நெருப்பு ஒன்று கொழுந்து விட்டு எரிவது போல், ஒரு அற்புத உணர்வு! அவள் முன்னே நான் பின்னே, என இருவரும் வண்டியில் அமர்ந்தோம். "வாழும் நாட்களே சொர்க்கம்! வாழாமல் வீணடித்தால், அதுவே நரகம்", என்று எப்போதோ எங்கேயோ படித்தது, அப்போது, அது உண்மை தான் என்று எனக்குப் புரிந்தது. ஆம்! அவள் பின்னே அமர்ந்து சென்றது, நான் வாழ்ந்து களித்த சொர்க்கம்.

எங்கள் இருவருக்கு நடுவிலும் இருந்தது என்னவோ ஒரு அங்குல இடைவெளி தான், இருந்தும், அது இந்திய-பாக். எல்லையைப் போல் எனக்குத் தோன்றியது. அவள் இடுப்போரம் அவ்வபோது, என் கைகள் ஊடுருவ முயன்றன. அவளின் மடிந்த வயிற்றின் மேடுகளை இறுக்கி அணைக்க, ஏக்கமாக இருந்தது. அந்த ஏக்கம் என் முகத்தில், வெள்ளையடித்த சுவற்றைப் போல் தெள்ளத் தெளிவாக வெளிப்பட்டது.

"என்னுயிர் காதலிக்கு,"Where stories live. Discover now