ஏழு

86 6 0
                                    

"மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன?

அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீதான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்"

என்று என் காதுள் பாடல் வரிகள் ஒலிக்க, அதன் வலியை உடைக்க அவள் வாசல் வந்தாள். தூரும் மழைத்துளிகள் என்னுள் ஊறும் ஆசைக்கு இதமாக இருந்தது. அதன் "ஹோ" என்ற அழுகைச் சத்தம் அவளைக் கண்டதும் "ஜோ" என்று களிப்பூட்டியது. பள்ளத்தைத் தேடி ஓடிய, மேகம் தூவிய வெண்ணிற முத்துக்கள் அவள் உள்ளத்தைச் சேர விரும்பும் இந்த பித்தனை பிரதிபலிப்பதாய் இருந்தது.

வாசலில் அகண்டு நிற்கும் ஆலமரத்தின் பொந்திலிருந்து இளம் கிளிகள் இணை சேர விழைந்து கீச்சிடும் கொஞ்சல் மொழிகள் கேட்டது. தூரத்தில் எங்கோ "கூ...கூக்..கூ..." என்று கூவிய குயிலின் ஒலி, "முஹாரி" ராகமாய் கேட்டது. தன் துணையைப் பிரிந்து வாடியது போல் அவ்வளவு சோகம், அதன் குரலில். அவ்விடத்தை தனதாக்கிக் கொண்ட வெண்பனியில், அவள் வீட்டு வாசல் சொர்க்க வாயிலை சித்தரித்தது என்பதை சொல்லியே ஆகவேண்டும். மொட்டவிழ்த்த முல்லைப் பூவுள் சொட்டு சொட்டாக சேர்ந்த நீர்த்துளிகள் என்னை எங்கோ கூட்டிச் சென்றது. இலை நுனியில் இளைப்பாறிய மழைத்துளிகள் வழியாக என் இதய தேவதை அவளைக் கண்டேன். ஒவ்வொரு துளியும், அவள் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் ஒவ்வொரு உணர்ச்சியையும் ஒவ்வொன்றாய் எனக்கு உணர்த்தியது.

விடாது சிந்தும் வானத்தின் கண்ணீருக்கு இடையில், படாமல் பட்டுச் சென்றது அவளின் கண்ணீர்த் துளிகள். என்னை நோக்கி விரைந்து வந்தாள். விம்மும் போதும் அவளின் குரலில் இனிமை குறையவில்லை. வாங்கும் மூச்சை இறுக்கி நிறுத்தி தொப்பாக முழுதும் நனைந்த என்னை மூர்ச்சையாக்கும் அளவிற்கு கட்டியணைத்தாள். குளிரிய உடம்பில் சூரியக்கதிர் உதித்தார்ப்போல் இருந்தது. அந்த அணைக்கட்டிலிருந்து விடுபட்டு அவள் விரல்கள் கோர்த்து வீட்டினுள் சென்றோம்.

"என்னுயிர் காதலிக்கு,"Opowieści tętniące życiem. Odkryj je teraz