ஐந்து

150 10 0
                                    

தனிமையும், இசைப்பாடல்களும் ஒருவரின் காதலில் செய்யும் - மாயாஜால லீலைகளும், மனதுள் ஏற்படுத்தும் விந்தை சிந்தனைகளும் என்னென்ன?. அடடா! அடடா! சொல்லி மாளாது. யாரோ இருவர் ஆடும் இடத்தில் நம் பேதை மனம் நம்மையும் அன்று நம்மவளாய் இருக்கும் ஒருவரையும் நிறுத்தி கற்பனை செய்வதும்; பாடல் வரிகளில் வரும் சோகங்களில் தங்கள் ஊடல் பசிக்கு உணவளிப்பதும்; இன்னும் பல வினோதங்களைச் செய்து, நம் மனம் அவையனைத்தையும் பொன் வாத்தைப் போல் பொத்திப் பொத்திக் காக்கும். தீடீரென்று ஒரு நாள், பொத்திக் காத்த வாத்தையே தன் கோவத்திற்கு பலியாக்கிக் கொள்ளும்.

தூரத்தில், தெருவின் ஒரு தொடக்கத்தில், "விசுக் விசுக்" என்று வேக வேகமாக, நீட்டி நீட்டி காலை வைத்து, காதில் "செவிட்டுக் குழாய்" என்று பல பெரியோர்களால் அன்புடன் அழைக்கப்படும் 'ஹெட்செட்' சொருகிக் கொண்டு, இரண்டு கைகளும் பையின் தோள் பிடியைத் தாங்கிக் கொண்டு, தானாக எதையோ நினைத்து சிரித்துக் கொண்டு, ஒரு ஆடவன் நடந்து வருவது தெரிந்தது. அவனின் நடவடிக்கைகளைப் பார்த்தால் பாண்ட் சட்டை அணிந்த பக்கா பையித்தியம் போலவே இருந்தது. அவனின் உடல் தொனியிலிருந்தே, "புள்ளயாண்டான் காதல் பிரமைல இருக்கான்", என்று ஊகித்துத் தெரிந்து கொள்ளலாம். சரி, அவன் யார்?, என்றுதானே குழம்புகிறீர்கள். கவலை வேண்டாம், அவன் சாட்ஷாத் நானே. நான் தான் அவ்வாறாகக் காலையில் கல்லூரி செல்ல பேருந்து நிறுத்தத்திற்கு விசுக் விசுக்கென்று விரைந்தேன். நான் தானாய் சிரித்துக் கொண்டு நடக்கவில்லை. விசயம் என்னவென்றால்....

"வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே..."

"என்னுயிர் காதலிக்கு,"Where stories live. Discover now