பதின்மூன்று

58 6 0
                                    

"சங்கர்... கண்ண திற...க்...கண்ணத் திறந்து பாருயென்ன"

என் முகத்தில் "சுளீர் சுளீர்", என்று யாரோ அறைவது போன்ற உணர்வு ஏற்பட்டது. அறைந்தால் எரியும், ஆனால் மாறாக என் முகத்தில் ஏதோ ஊர்வது போல் இருந்தது. ஆம்! அந்த ஆஜானுபாகு ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வந்து தர, அதைத் தன் கண்ணீரோடு என் முகத்தில் அறைந்தாள், என்னவள்.

அவள் தெளித்த நீர் என்னை எழுப்பவில்லை. அவள், தன் விசும்பும் குரலால் என்னை அழைத்ததனால் தான் இழந்த சுயவுணர்வைத் திரும்பப் பெற்றேன். கனவை உடைத்துக் கண்களைத் திறந்தது போல், படபடப்போடு கண் விழித்தேன்.

அழுகும் அவள் குரல், இப்போது மெல்ல அமைதியானது. வார்த்தைகள் அவள் தொண்டைக் குழிக்குக் கீழேயே புதைந்துவிட்டது, என்பது எனக்குப் புலனானது. மை கரைந்து, கலையிழந்த அவளின் கண்கள் என் விழிகள் திறந்ததும், மீண்டும் புத்துணர்வைப் பெற்றது. புன்னகையே அறியாதவளாய் சிறிது நேரம் துயரத்தில் புலம்பிய அவளின் உதடுகள், இப்போது அரும்பிய மொட்டைப் போல் இதழ்கள் திறந்தன.

தன் மார்போடு என் முகத்தைப் புதைத்து, உச்சந்தலையில் சின்ன முத்தம் பதித்தாள். இரண்டொரு நிமிடங்களில், நான் நிதானத்திற்கு வந்தேன். அருகில் கிடந்த, என் முதுகை வலு பார்த்த நாற்காலியைப் பிடித்துக் கொண்டு எழுந்து நிற்க முயன்றேன். உடனே முடியவில்லை! உறைந்த ரத்த நாளங்களுக்குள் உதிரம் பாய்ந்தோட, கால் முதல் தலை வரை அப்போது, மின்சாரத்தைத் தொட்டது போல் இருந்தது. கண்கள் இருண்டு இருண்டு ஒளியிழந்துத் தள்ளாடியது. ஒருவாராக, அவள் கைத்தாங்கலோடு எழுந்து நின்றேன்.

எதிரில் இருந்த நாற்காலியில் அந்த ஆஜானுபாகு, புருவங்களைத் தன் நடு நெற்றி வரை உயர்த்தி, நெரித்துக் கொண்டு, அகண்ட விரிந்த கண்களோடு, கோவம் கொந்தளிக்க அமர்ந்திருந்தார். அவரது, வலது கையின் விரல்கள் நாற்காலியின் கைப்பிடியை உடைத்து சிதறும் அளவிற்கு இறுக்கமாக, அழுத்திப் பிடித்திருந்தது. அதனால், அவரின் மேல்புற முழங்கையில் நரம்புகள் ஆங்காங்கே எட்டிப் பார்த்தது.

"என்னுயிர் காதலிக்கு,"Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ