"காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன்
இந்நாளில் எனை நீ மறந்தாயே!
நீ இல்லாமல் எது நிம்மதி?
நீ தான் என்றும் என் சந்நிதி.
கண்ணே கலை மானே கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்"என்ற 'கவிஞர்' கண்ணதாசன் அவர்களின் கடைசி பாடலின் கடைசி வரிகள் என் உள்ளப்பதிவில் ஒலித்துக் கொண்டே இருந்தது. "அவளைக் காண வேண்டும்", என்ற ஆசை என்னை உட்கொண்டது. "நாளை கல்லூரியிலிருந்து நேராக அவளைக் காணச் செல்லலாம்", என்று உள்ளம் எனக்கு ஆறுதல் கூறியது. ஆனால், மனமோ "போ என்று சொன்னவள் வீட்டிற்குப் போக வேண்டாம்", என்றது. உடனே உள்ளம் "அதனால் என்ன? அவள் உன் காதலி தானே. அவளிடம் செல்ல உனக்கு அனுமதியும் அழைப்பிதழும் தேவையா?", என்று கேள்வி எழுப்பியது.
"அப்படி என்றால், ஏன் அவள் போய் விடு, என்று சொன்ன போது ஒன்றும் பேசாமல் ஊமையைப் போல் திரும்பினாய்?", என்று கூரிய கேள்வியை மனம் எழுப்பியது. "அவள் கேட்ட எதையும் அவனால் மறுக்க முடியாது. அதனால் தான் அன்று அவள் கேட்டதும் மறுக்காமல் திரும்பினான்", என்று உள்ளம் மனதிற்குப் பதிலளித்தது. இப்படி, உள்ளமும் மனதும் ஒன்றோடு ஒன்று வாதிட, என் நிலைமைக் கவலைக்கிடமானது.
"இதிலிருந்து என்னைக் காப்பாற்ற யாருமில்லையா?", என்று நான் ஏங்கிய போது, பார்த்தாவின் அழைப்பு அலைபேசியில் வந்தது. உடனே, மனதை மறுத்துவிட்டு, உள்ளத்தின் பேச்சைக் கேட்க முடிவு செய்தேன். உள்ளத்தின் பேச்சை நிஜமாக்கப் பார்த்தாவின் உதவி மிக அவசியம், என்பதை நான் முன்னமே அறிவேன். அதனால், ஐந்து ரிங்கில் அவன் அழைப்பை ஏற்றேன்.
"எப்புட்றா இருக்க", என்று அவன் கேட்கும்போதே, "உடனே அரை மணி நேரத்துல படித்துறைக்கு வா. உன்ட பேசணும். நேர்ல பேசிக்கலாம் எல்லாத்தையும்", என்று சொன்னேன். "சரி, வர்ரே..", என்று பதில் சொல்லும் போதே அழைப்பைத் துண்டித்து விட்டு, குளிக்கக் கிளம்பி சென்றேன்.
ŞİMDİ OKUDUĞUN
"என்னுயிர் காதலிக்கு,"
Kısa Hikayeஇன்னிசையைப் பிரிந்த மெளனத்தின் அழகான உயிரோவியம், இந்த "என்னுயிர் காதலிக்கு," வாருங்கள்! மெளனத்தின் போரொலியில் இன்னிசையைக் கேட்போம்.