"அம்மா அம்மா அம்ம்ம்மா", என்று நான் உரக்கக் கத்தினேன். "எனக்குத் திடீரென வளிப்பு வந்து விட்டதோ? அதனால் தான் அழைக்கிறேனோ?", என்று அம்மா அறக்கப்பறக்க விரைந்து, நான் இருக்கும் இடத்திற்குப் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தாள்.
எதிர்பாராத படி தெம்பாக, மூங்கில் கழியைப் போல் நெடுங்கூராக நான் அவள் முன் நின்றிருந்தேன். "என்னடா ஆச்சு? ஏன்டா கத்தினே? தலைல எதாச்சும் வலிக்கறதா? உடம்புக்கு எதாச்சும் பண்றதா?", என்றெல்லாம் பதட்டத்தோடு, பல கேள்விகளை அடுக்கி நிறுத்தினாள்.
எதையுமே கேட்காதவன் போல் அமைதியாக அவள் முகத்தைப் பார்த்த வண்ணம் மெளனம் சாதித்தேன். என் நெற்றியின் மேல் கை வைத்துப் பார்த்தாள். பின், என் வலது கன்னத்தை தன் வலது உள்ளங்கையால் பட்டும் படாதபடி தட்டி, "என்னடா ஆச்சு? ஏன் பேந்த பேந்த முழிக்கற?", என்று முகத்தில் சந்தேக ரசத்தைப் படர விட்டுக் கொண்டு கேட்டாள்.
அப்போதும் நான் ஏதும் பேசவில்லை. என் மெளனம் அவர்கள் பொறுமையின் எல்லையை உடைத்துத் தகர்த்தது. கோபம் கொந்தளித்து வந்தும், அவர்களால் அதை என்னிடம் வெளிகாட்ட முடியவில்லை. அதனால், வேறேதும் பேசாமல் மீண்டும் சமையலறை நோக்கி விரைந்தார். அதற்கேற்றார் போல், குக்கரும் விசில் ஊதியது.
"அம்மா", என்றழைத்தேன்.
"என்ன?", சற்றுக் கடுமையான குரலில் கேட்டார்கள்.
"அது எங்கமா?"
"எது எங்க?"
"அதான், அதோ அந்த மூணாவதுத் தொட்டி-ல நான் வைச்ச ரோஜா செடி. எங்க அது? தொட்டி-ல காணும்"
"அதுவா, அது நல்லா துளிர் விட்டு வந்துது. அதான், அத எடுத்து, அதோ அங்க மண்ணுல நட்டு வைச்சுருக்கேன்"
பதில் ஏதும் பேசாமல் அம்மா சொன்ன இடம் நோக்கிச் சென்றேன்.
"இதுக்குதான் அம்மா, அம்மா-னு கத்தினியா", என்று முணுமுணுத்துக் கொண்டே அம்மா சமயலறைக்குள் சென்றார்.
STAI LEGGENDO
"என்னுயிர் காதலிக்கு,"
Storie breviஇன்னிசையைப் பிரிந்த மெளனத்தின் அழகான உயிரோவியம், இந்த "என்னுயிர் காதலிக்கு," வாருங்கள்! மெளனத்தின் போரொலியில் இன்னிசையைக் கேட்போம்.