விடியலை நோக்கி-01

171 5 6
                                    

*விடியலை நோக்கி....*

சிறுகதை ஆக்கம்: Afaã

★பாகம்: 01★

உச்சி வெயில் நேரமது கதிரவன் வானில் உச்சத்துக்கே வந்து இருந்தான்.... நோன்பு காலம் என்பதால் வீதியோரங்கள் எங்கும் அமைதிப் பரவசமாக இருந்தன.
Aizaa தன் இறைவனிடம் அவளது மனக்குமுறல்களை கொட்டிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். Aizaa இறைவன் மீது அதீத நம்பிக்கை கொண்டவளும், மார்க்கப் பற்றுடைய ஓர் இஸ்லாமிய கன்னிப்பெண்ணுமாவாள். அவள் கவலை சிறையில் தத்தளிக்கும் போதெல்லாம் அவளுக்கு ஆறுதலாக இருந்து அவள் மனதை நிம்மதியடையச் செய்வது இறை வசனங்கள் மட்டுமே.....
இவ்வாறிருக்க அவளின் பிரார்தனைகளுக்கு நடுவே Aizaa என்றொரு கம்பீரக் குரல்.... அது வேறு யாருமல்ல அவளது தந்தையின் உடன் பிறப்பு சகோதரியின் குரல் என்பதை அந்த அதிகார தொனியிலே அறிந்து கொண்டாள். அக் குரலை கேட்ட Aizaa தனது பிரார்த்தனைகளை அவசர அவசாரமாக முடித்துக் கொண்டு, தனது சிவந்த கன்னம் வழியே வழிந்தோடிய கண்ணீரை தன் முந்தானையினால் துடைத்தவளாய்..... "ஆஹ் மாமி இதோ வருகிறேன்" என்று கூறிக்கொண்டு ஓடோடினாள்.

"என்னடி உள்ள எதோ முனு முனுத்திடு இருந்தியே.... ஒரு மூளைல போய் ஏதேதோ முனு முனுத்திட்டு இருந்தா.... இங்க உள்ள வேல வெட்டியெல்லாம் யார் செய்வது ஆஹ்.... என்ன செய்ய உன்ன பாத்துக்க யாரும் இல்லாத பொறுப்பு சுமைய நான் பார்க்க வேண்டி இருக்கு... எல்லாம் என் கருமம் தான்" என பல சுடு சொற்களை கொஞ்சம் கூட இரக்கம் இல்லாதவராக அடிக்கிக் கொண்டே போனார் Aizaaவின் மாமி. இளம் மனதையுடைய Aizaa வின் உள்ளமோ.... ஆத்திரம் பொறுக்க முடியாமல் துடியாய் துடித்துப் போனது. இந்த ஏச்சும் பேச்சும் அவளுக்கு புதிதானது எதுவுமில்லை தான், ஆனாலும் அவளின் உள்ளத்தில் சிறுவயதிலே அவளை விட்டு இறையடிச் சேர்ந்த அவளது பெற்றார்களின் நினைவுகள் ஏக்கங்களாக அலை மோதின. நானும் அவர்களுடன் சேர்ந்து சென்றிருக்கலாமே என பல சமயங்களில் நினைத்தாலும், " எல்லாம் வல்ல இறைவனின் நாட்டப்படியே தான் எல்லாம் நடந்தேறும்" என தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டவளாய் தன் பிஞ்சு இதயத்தை கல்லாக்கிக் கொண்ட Aizaa சமயலறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்,தனது அன்றாட வேலைச் சுமைகளை செய்யும் நோக்கில்.....
அங்கே,
ஸஹர் உணவு தயாரித்த அழுக்குப் பாத்திரங்கள் எல்லாம் சமயலறை வளாகம் எங்கும் நிறைந்து காணப்பட்டன. அலாரத்தில் ஏற்பட்டிருந்த ஏதோ ஒரு கோளாறினால் அன்றைய தினம் அவளால் ஸஹர் செய்ய வாய்ப்பு கிட்டவில்லை.பட்டினி நோன்பு பிடித்த அவளால் அவற்றை எல்லாம் ஒழுங்கு முறையாக சுத்தம் செய்யும் உடல் வலிமை இருக்குமோ என்ற சந்தேக பெரு மூச்சுடன் அவற்றை ஒவ்வொன்றாக சுத்தம் செய்து கொண்டு தன் எதிர்க்கால விடியலை நோக்கி பகற்கனவில் மூழ்களானாள்........💤💤💤

தொடரும்...........
(Created by: Afaã)

(Created by: Afaã)

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
 விடியலை நோக்கி.....Where stories live. Discover now