விடியலை நோக்கி-03

61 4 3
                                    

*விடியலை நோக்கி....*

✍🏻சிறுகதை ஆக்கம்: Afaã

★பாகம்: 03★

இந்த கவலைக்கிடமான சம்வத்திற்கு பின்னரும் Aizaa வழமை போலவே அன்றும் தன் மனப்பாரங்களை தன் இறைவன் முன்னால் மண்டியிட்டு இறக்கி வைப்பதற்காக இருட்டறைக்குள் நடந்தாள் தன் பாதங்கள் இரண்டையும் பல அடி தூர இடைவெளியில் வைத்தவளாய்.....🏃🏻‍♀️ அவள் இறைவன் முன்னால் கை ஏந்தி பிரார்த்தித்துக் கொண்டிருக்கவே, லுஹர் தொழுகைக்கான அzஸானும் அவள் செவிக்கெட்டியது. உடனே அவள் லுஹர் தொழுகையை நிறைவேற்றிவிட்டு, இரண்டு ரக்ஆத் ஸூன்னத் தொழுது தனது எதிர்கால விடியலுக்கான சிறந்ததொரு ஆரம்பம் கிடைக்க வேண்டும் என்ற உகப்பில் வேண்டலானாள். பின்னர் Aizaaவின் கவனமோ அந்த இருட்டறையின் ஒரு பக்க சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த தூசி படிந்திருந்த ஓர் பொலித்தீன் பையை நோக்கி திரும்பலாயிற்று. அவள் தொழுகைப் பாயிலிருந்து எழுந்து தூசிப்படிந்த அந்த பொலித்தீன் பையை துடைத்தெடுத்தாள். அந்த பையினுள்ளேயோ... Aizaaவின் பிறப்புச் சான்றிதழ் உட்பட, கல்வித் தகைமை சான்றிதழ்களும் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டவாறே காணப்பட்டன. அவள் அவை ஒவ்வொன்றையும் எடுத்து பார்க்களானார். Aizaaவின் தனிப்பட்ட குடும்ப பிரச்சினைகள் காரணமாக அவளின் கல்வித்தகைமைகளோ சாதாரண தரத்துடன் முற்றுப்புள்ளி இடப்பட்டிருந்தது. எவ்வளவு தான் திறமைசாலியாக இருந்தாலும் அவளின் திறமைக்கு கரம் கொடுக்க யாரும் முன்வந்திருக்கவுமில்லை......, அவளின் சூழ்நிலை இடங்கொடுத்திருக்கவுமில்லை.....!!! என்ன செய்ய இறைவனின் நாட்டத்தால், காலம் செய்த கோலம் என தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டவளாய் தற்போது உள்ளதை கொண்டு ஏதாவது முயற்சிப்போம் என நினைத்தால்.... தன்னிடம் இருந்த ஓர் கடதாசி fileக்குள் தேவையான தாள் பிரதிகளை அடுக்கி எடுத்துக்கொண்டு தான் சொந்தக்காலில் நிற்கக் கூடியவாறு ஓர் உத்தியோகம் கிடைக்க வேண்டும் என்ற அவாவில் பஸ் தரிப்பிடத்தை நோக்கி நடக்கத்துவங்கினாள் Aizaa, இறைவன் எப்போதும் அவளுக்கு துணையாக நிற்பான் என்ற ஒரே நம்பிக்கையில்......

தொடரும்.........

(Created by: Afaã)

(Created by: Afaã)

¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.
 விடியலை நோக்கி.....Donde viven las historias. Descúbrelo ahora