விடியலை நோக்கி-02

78 4 5
                                    

*விடியலை நோக்கி....*

✍🏻சிறுகதை ஆக்கம்: Afaã

★பாகம்: 02★

Aizaaவின் உள்ளத்திலோ எண்ணிலடங்கா கனவுக் கோட்டைகள் விண்ணைத் தொடும் அளவிற்கு கட்டப்பட்டுக்கொண்டே சென்றன. அவளை அறியாமலேயே முகத்தில் ஓர் பூரிப்பு. அந்த புன்னகையோ அவள் முகத்தின் அழகிற்கு இன்னும் அழகு சேர்க்கும் அணிகலனாக இருந்தது. சந்தோஷத்தின் உச்சத்தில் மெய் மறந்து செல்லவே அவள் சுத்தம் செய்து கொண்டிருந்த கண்ணாடிப் பாத்திரம் கை நழுவி கீழே விழுந்து உடைந்து விட்டது. கீழே விழுந்த சத்தத்தை கேட்டு திடுக்கிட்டு அவள் மூழ்கிக் கிடந்த கனவை களைத்தவளாய் கீழே பார்த்தாள் Aizaa. கண்ணாடிப் பாத்திரம் உடைந்து கிடந்ததை கண்டு பதற்றத்தில் தடுமாறளானாள். அவளுக்கோ கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. மாமியிடம் என்ன பதில் சொல்லி சமாளிப்பது என்பது பதற்றத்திலிருந்த அவளின் அறிவுக்கோ எட்டவில்லை. சும்மாவே Aizaaவின் மாமிக்கு அவள பிடிக்கவே பிடிக்காது. அவள் செய்யாத தப்புகளுக்கும் கூட அவங்க Aizaaவை தான் சாட்டுவாங்க...! நிலைமையோ இப்படியிருக்க Aizaaவினால் நடந்த இந்த தவறுக்கு எந்த கோலத்தில் தண்டனையை தீர்த்து கட்டிடுவாங்க என்பதை Aizaaவினாலேயே ஊகித்துக் கொள்ள முடியாது, கீழே உடைந்து கிடந்த கண்ணாடிப் பாத்திர துண்டுகளை ஒவ்வொன்றாக பொறுக்கத் துவங்கினாள் Aizaa. அவள் பொறுக்கி முடிக்க முன்பே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்து வந்து நின்றார் Aizaaவின் மாமி. *Aizaa*..........!!! என அவ கத்திய சப்பதத்தில் சமயலறையோ இரண்டாகி "Aizaa! Aizaa!" என்ற பெயரோ பல முறை எதிரொலித்தது. தனது மாமியின் குரலை கேட்ட Aizaa நடுநடுங்கிப் போனாள். பீதியால் அவள் பொறுக்கி கொண்டிருந்த கண்ணாடிப் பாத்திரத்தில் ஓர் கூர்மையான பகுதி அவளின் அழகிய வெண் கரத்தை கிழித்துச் சென்றது. 'குபு குபு' என இரத்தமோ வழிந்தோடவே, தன் முந்தானையின் ஒரு பகுதியால் இருக்கமாக கட்டிக் கொண்டு " என்ன மன்னிச்சிடுங்க மாமி" என வார்த்தைகளை விழுங்கியவளாய் தனது உள்ளத்திலிருந்து கசிந்த மன்னிப்பு வார்த்தைகளை சொல்ல ஆரம்பித்தாள். அவளின் உதடுகள் ஏதோ அசைந்ததே தவிர வார்த்தைகளோ, சப்தமோ வராமல் திண்டாடின.
" ஓஹ் நீ செஞ்சி ஈக்ர இந்த வேலக்கி மன்னிப்பு எல்லாம் தரும் அளவிற்கு எல்லாம் நான் ஒன்டும் தியாகி இல்ல, நானும் எத்துன நாளா அவதானிச்சிடு தான் வாரேன்... வர வர உன் கவனம் எல்லாம் வேற எங்கேயோ தான் இருக்குது போல.... ஒரு வேலய கூட உருப்படியா செய்றியா? என்று பாரு" என்று பல்லை நறு நறுக்கி ஏசிக் கொட்டியவாறு Aizaaவின் கன்னத்திற்கோ இரண்டரைகளை விட்டாங்க.....!!!! மாமி.
"வேலா வேலகி கொட்டிக் கொள்றத்துக்கு சாப்பாடு தாரத நிறுத்தினால் தான் உன்ன மாதிரி ஜென்மங்களுக்கு புத்தி வரும்.... ரெண்டு, மூனு நாளக்கி அப்படியே பட்டினில இரு" என்று பல்லாயிரக் கணக்கான வார்த்தைகளால் Aizaaவின் இதயத்திற்கு தீக்காயம் இட்டாங்க அவள் மாமி... அடித்த அடி மங்கினாலும்; சொன்ன சொல் மாங்கது என்றது போல Aizaaவின் பஞ்சு போன்ற மென்மையான கன்னத்தில் பதிந்திருந்த அவள் மாமியின் விரல் அடையாளங்கள் ஓரிரு மணித்தியாளங்களில் மறைந்தாலும் கூட அவள் உள்ளத்தில் இடப்பட்டிருந்த தீக்காயமோ மங்கிச் செல்லவே இல்லை.

தொடரும்......
(Created by: Afaã)

(Created by: Afaã)

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
 விடியலை நோக்கி.....Where stories live. Discover now