விடியலை நோக்கி-06

47 3 1
                                    

*விடியலை நோக்கி*

✍🏻சிறுகதை ஆக்கம்- Afaã

★பாகம்★- 06

களைத்துப் போனவளாய் வாசலில் போட்டு வைக்கப்பட்டிருந்த வாங்கின் ஒரு புறத்திலே ஒதுங்கி அமர்ந்தவாறு இருந்த Aizaaவின் அருகே வந்த zulaiha டீச்சரின் கணவர் அவளுக்கு ஏதாவது உதவி செய்யலாம் என்ற நோக்கில் அவள் கையில் வைத்திருந்த கடதாசி file ஐ வாங்கி, ஒவ்வொரு பக்கமாக புரட்டியவாறு பார்க்கலானார். பெரு மூச்சுடன் fileஐ மூடிய zulaiha டீச்சரின் கணவர்...... " இங்க பாரு புள்ள.... ஒன்ன நெனச்சா எங்கள்கும் சரியான மனவருத்தம் தான். இந்த காலத்த பொருத்தமட்டுல O/L சித்திய மட்டும் வைத்துக் கொண்டு உத்தியோகம் தேடுவது என்றது பெரிய risk. பல்கலைக்கழக பட்டதாரிகள் கூட உத்தியோகம் பெறுவதற்காக பல கஷ்டங்கள எதிர் நோக்குறாங்க என்றது தான் தெளிவான உண்ம.....!" என்று அவரது கருத்தை பட்டென சொல்லிட்டார். அவரின் கருத்துக்கள் உண்மை என்பது Aizaaவின் புத்திக்கெட்டினாலும் Aizaaவின் உள்ளத்திற்கோ புரியவில்லை போலும். அவள் இரு விழிகளும் கண்ணீரால் நிரம்பி வழியவே,,,,, அவள் கன்னங்கள் இரண்டும் சிவப்பாக நிறம் மாறி, அவளால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத அளவிற்கு அவள் உதடுகளும் விம்மத் தொடங்கின. " என்ன செய்ய???எல்லாம் இறைவன் செயல்! இறைவன் விதியை மாற்ற முடியாதே..." என வழமை போலவே தன்னை தானே சமாதானம் செய்தவளாய், வேறு வழி தெரியாது  அங்கிருந்து விடை பெற்று திரும்பலானாள் Aizaa.  ஓரிரு அடி வைத்து நுழைவாயிலை நெருங்கிய அவள் கவலையை மறைத்தவளாய், zulaiha டீச்சரையும், அவரது கணவரையும் பார்த்து...ஓர் புன்முறுவலுடன் தான் போய் வருவதாக  தன் முகபாவனையில் தெரிவிக்கவே,,, Zulaiha டீச்சரின் கணவர் கை சைகையினால் அங்கேயே சற்று பொறுத்திரு என கூறியவாறு இருவரும் Aizaaவை நோக்கி நுழைவாயிலின் அருகே வரவே, Aizaa அவர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ தெரியவில்லையே என ஒரு கனம் சிந்திக்கலானாள். "இங்க பாரு புள்ள நீ சும்மா தெரு வழியாக சுத்துரதுல ஒரு பிரயோசனுமும் இல்ல. எங்கட வீட்ல ஒரு வேல போட்டு தாரோம்... ஒனக்கு விருப்பம் என்டா செய்யலாம் என zulaiha டீச்சரின் கணவர் கூறியதை கேட்டு Aizaa தலையசைப்பதைப் பார்த்தால் அந்த வேலை என்ன என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாகத் தான் இருக்கிறாள் என்பது zulaiha டீச்சர்க்கு புரிந்து போகவே அவ இப்படிச் சொல்லலானார்...."நாங்க ரெண்டு பேருமே ஸ்கூல்   போறதால எங்கட சின்ன மகன பார்த்துக் கொள்ள யாரும் இல்ல. இவ்ளோ நாளா இருந்த பணிப்பெண்ணோ... சுகயீனம் காரணமாக ஊருக்கு கிளம்பிட்டாங்க.... " விருப்பம் என்றால் அந்த வேலையில் சேரலாம் என்பதை கொஞ்சம் தயக்கத்துடனேயே Aizaaவிடம் கூறலானார் zulaiha  டீச்சர். Aizaaவிற்கோ அந்த வேலையில் அவ்வளவு ஈடுபாடு இல்லாவிட்டாலும் வேறு வழியில்லாமல் அவ்வேலைக்கு இணக்கம் தெரிவித்தாள் Aizaa.....
இவ்வாறு இவர்கள் கதைத்துக் கொண்டிருக்கவே இfப்தாருக்கான நேரமும் நெருங்கலாயிற்று. Zulaiha டீச்சர் Aizaaவிற்கும் சேர்த்தே நோன்பு துறப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்.  சற்று நேரத்தில் மஹ்ரிப் தொழுகைக்கான அzஸானும் வானொலி வாயிலாக ஒலிக்கவே அவர்கள் அன்றைய தினம் இறைவனுக்காக வைத்திருந்த நோன்பை அவன் நாமமதிலேயே துறந்துவிட்டு,மஹ்ரிப் தொழுகையையும் நிறைவேற்றிவிட்டு மீண்டும் வீட்டின் வாசற்கதவிற்கருகில் கூடினார்கள். Aizaa முதலில் இறைவனுக்கும், இரண்டாவதாக அவளுக்கு உதவிக் கரம் நீட்டய zulaiha டீச்சர் மற்றும்அவரது கணவருக்கு இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துவிட்டு, நாளைய தினம் இன்ஷா அல்லாஹ் வேலைக்கு வருவதாகக் கூறிவிடைபெறவே..... அந்த நேரமோ அதிகம் இருள் சூழ்ந்திருந்தமையால் Aizaaவின் பாதுகாப்பை கருதிய zulaiha டீச்சரும் அவர் கணவரும் அவளை அவர்களுடைய வாகனத்திலேயே வீடு வரை சென்று, விட்டு வந்தனர்.

தொடரும்....

(Created by- Afaã)

(Created by- Afaã)

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
 விடியலை நோக்கி.....Where stories live. Discover now