விடியலை நோக்கி-10

51 2 0
                                    

*விடியலை நோக்கி....*

✍🏻சிறுகதை ஆக்கம்- Afaã

★பாகம்- 10★

Aizaaவோ........ அமைதியான சுபாவத்தையுடையவள் என்பதால் அவளுக்குள் இவ்வாறான திறமைகள்  இருப்பது ஆரம்பத்தில், zulaiha டீச்சர்க்கோ..., அவரது கணவருக்கோ....,  ஒரு துளி கூட விளங்கவே இல்லை.... Aizaaவின் ஒவ்வொரு திறமைகளையும் கண்டு வியந்த Zulaiha டீச்சரும், அவர் கணவரும் அவளுக்கு.... அவர்களுடைய பாடசாலை நூலகத்தில் ஓர் உத்தியோகத்தை பெற்றுக் கொடுக்க எண்ணினர். அவளது கல்வித் தகைமை சான்றிதழோ சாதாரண தர சித்தியுடன் மட்டுமே இருந்ததால்.... அவர்களால் Aizaaவிற்கு வேறு சிறந்த உத்தியோக வழிகளை காண்பிக்க முடியாதிருந்தது. ஏனெனில், எவ்வளவு தான் திறமைகள் நிறைந்து காணப்பட்டாலும் ஓரிரு மணித்தியாலங்கள் எனும் கால நிர்ப்பந்தத்திற்குள் எழுதும் பரீட்சை வினாத்தாள்களின் புள்ளிகளே... ஒவ்வொருவரினதும் எதிர்காலத்தை தீர்மானிக்கும் காலமிது.  அதனால் இக் காரணமும்.... Aizaaவிற்கும் தன் விடியலை நோக்கி பயணிக்கும் பயணத்தில்  பெரும் தடையாக இருந்தது. அது அவ்வாறிருக்க....

Zulaiha டீச்சரும், அவரது கணவரும் Aizaaவிற்கு பாடசாலை நூலகத்தில் ஓர் உத்தியோகத்தை பெற்றுக் கொடுப்பதற்கு மும்முரமாக முயற்சித்தனர்....

அன்றொரு நாள் வெள்ளிக்கிழமை.... ஜூம்ஆ தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடு வந்த Zulaiha டீச்சரின் கணவர் ஓர் சுப செய்தியுடனேயே வந்திருந்தார்....
"Aizaaவிற்காக முயற்சித்த உத்தியோகம் சரிவந்து விட்டது" என்ற சந்தோஷமான சுப செய்தியை அவர் தன் மனைவியிடமும், Aizaaவிடமும் பகர்ந்து கொள்ளலானார்.....
தனது மகனான Layaan க்கோ...அப்போது இரண்டரை வயதை எட்டியிருந்தது. இன்னும் 6 மாதங்களில் அவனுக்கு மூன்று வயது பூரணமாகும் என்பதால்.... அவனை இன்னும் 6 மாதங்களுக்குப் பிறகு ஆரம்பப் பள்ளியில் சேர்த்து விட்டு... Aizaaவை பாடசாலை நூலகத்தில் ஓர் உதவியாளராக சேர்ப்பதே Zulaiha டீச்சரினதும், அவர் கணவரினதும் திட்டமாக இருந்தது.

இந் நற்செய்தி Aizaaவின் செவிகளுக்கு எட்டவே... அவள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கலானாள். அவள் கால்களோ நிலத்தில் கூட படவில்லை.... அவ்வளவு சந்தோஷம் அவளுக்கு.... இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் கொடுத்த இறைவனுக்கும், உதவிக் கரம் நீட்டய Zulaiha டீச்சர்க்கும் அவர் கணவருக்கும் நன்றி சொல்ல அவள் மறக்கவில்லை.... அவசர அவசரமாக வுழூ செய்து கொண்டு இரண்டு ரக்ஆத் ஸூன்னத் தொழுது நன்றி பகர்ந்தாள்.....
இவ்வாறு இவள் தொழுகைப் பாயில் தன் இறைவனிடம் கை ஏந்தி பிரார்த்தித்துக் கொண்டிருக்கவே... வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. வீட்டிற்கு யாரோ வந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்ட Aizaa.... சமயலறை கட்டிற்கு விரைந்தாள்..............

தொடரும்........

(Created by- Afaã)

(Created by- Afaã)

¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.
 விடியலை நோக்கி.....Donde viven las historias. Descúbrelo ahora